(தி.தயாளன்)
ஜீவஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக  மட்டக்களப்பு மண்டூர் 39 ஆம் கொளனி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு  திங்கட்கிழமை பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருவருட்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

குறிப்பிட்ட மாணவர்கள் 6 கிலோமீற்றர்  தூரத்தில் இருந்து காட்டு பாதையூடாக நடந்து வருபவர்கள். கூடவே யானைகள் மற்றும் ஏனைய ஆபத்தான விலங்கினங்கள் கொண்ட ஓர் பாதையாகும்.  

இவற்றை அறிந்து கொண்ட ஜீவ ஊற்று அன்பின் கரம் குழுவினர்  அயராத முயற்சியின் பலனாக இவ் உதவித்திட்டம் வழங்கிவைக்கப்பட்டது 

இந்த உதவி ஜீவ ஊற்று அன்பின் கரம் நியூசிலாந்து இணைப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது. அத்துடன் அவ் அமைப்பின்  நிர்வாகத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர்  திலீப் மற்றும் அவருடன் இணைந்து  சாயி ஆகியோர் இவற்றை உரியவர்களிடம் வழங்கி வைத்தனர்









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours