(காரைதீவு நிருபர் சகா)
அம்பாறை மாவட்டத்தில் நீண்டகால தேவையாகவிருந்துவந்த மூன்று தமிழ்ப்பிரதேச செயலகங்களை நிறுவுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரசிங்க இணங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லஎமது கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டுள்ளார். அவருடனான நேற்றைய சந்திப்பு வெற்றியளித்துள்ளது.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தலைமையிலான குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று(8) வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் சந்தித்தது.
அச்சந்திப்பு தொடர்பாக கேட்டபோதே கோடீஸ்வரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சந்திப்பின்போது பிரதமர் ரணிலுடன் அமைச்சர் ரவிகருணாநாயக்க த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன்எம்.பி. ஆகியோரும்பிரசன்னமாயிருந்தனர்.
அம்பாறை தமிழ்ப்பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மாநகரசபை உறுப்பினர்கள் புத்திஜீவிகள் அடங்கிய குழு தாம்கொண்டுசென்ற திட்டமுன்வரைவினை கையளித்துஅதற்கான நியாயமான காரணங்களை எடுத்துரைத்தனர்.
அதற்கு பிரதமர் ரணில் பெரும்பாலான கோரிக்கைளுக்கு இணங்கியுள்ளதனாலும்உடனடியாக சிலகோரிக்கைகளை நடைமுறைப்படுத்த அதிரடி நடவடி;ககை எடுத்துள்ளதனாலும் எதிர்வரும்தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்சஜித்தை பூரணமாக ஆதரிப்பதென முடிவானது.
அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் ஜனாதிபதிதேர்தலின்போது புதியஜனநாயகமுன்னணிவேட்பாளர் சஜித்பிரேமதாசாவை ஆதரிக்குமாறு அந்தஇடத்தில்வைத்தே பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒருமணிநேரம்இச்சந்திப்புஇடம்பெ ற்றதாகவும்சந்திப்பு வெற்றியளித்தள்ளதாகவும் கோடீஸ்வரன்எம்.பி. மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கோடீஸ்வரன் எம்.பி.மேலும் இச்சந்திப்பு பற்றி கூறுகையில்;:
அம்பாறை தமிழ்மக்களின் அடிப்படைத்தேவைகள் கல்வி சுகாதாரம் சமுக பொருளாதார விடயங்களை உள்ளடக்கியதாக இவ்வரைபு வரையப்பட்டிருந்தது.
கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரமுயர்த்ததல் மற்றும் பொத்துவில் பிரதேசத்துக்குட்பட்ட கோமாரி தனிப்பிரதேச செயலகம் சம்மாந்துறைப்பிரதேசத்திற்குட் பட்ட மல்வத்தை தனிப்பிரதேச செயலகம் உருவாக்கல் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. உடனடியாக கல்முனை வடக்குபிரதேசசெயலகத்திற்கு தனியான கணக்காளர் நியமிப்பதற்கும் உரியஅமைச்சருடன் தொடர்புகொண்டு நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை கரையோர தமிழ்ப்பிரதேச வைத்தியசாலைகள்தொடர்ச்சியாக கல்முனை சுகாதாரபணிமனையால் புறக்கணிக்கப்பட்டுவந்ததன்கா ரணமாக அவற்றை அம்பாறை சுகாதாரப்பிரிவுடன்இணைத்தல் அல்லது தனியானபிரிவை ஏற்படுத்தல் என்ற கோரிக்கைக்கும்இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
கல்முனை தமிழ்கல்விவலயம் உருவாக்குவது தொடர்பிலும்இணக்கம் காணப்பட்டது.
கடந்தகாலங்களைப்போல் எவ்வித கோரிக்கைகள் அல்லது நிபந்தனைகளை முன்வைக்காமல் அரசுக்கு வழங்கிய ஆதரவால் எவ்வித பலனும்அம்பாறை த்தமிழ்மக்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் பலகோணங்களிலும் நசுக்கப்பட்டுவந்தார்கள். புறக்கணிக்கப்பட்டுவந்தார்கள். எனவே இனியும் அவ்விதம் தொடரமுடியாது. இருப்பதையாவது தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
எதிர்காலத்தில் இதுவரை யாரும் எதிர்பார்க்காதவகையில் அம்பாறை மாவட்டத்தமிழ்மக்களின் அரசியல் பாதை புதுவடிவம்பெறலாமென மேலும்தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours