(துதி)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல் 21ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. 

நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில்கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள்சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 

இன்று மட்டக்களப்புநீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 21ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார். 

குறித்தசம்பவத்துடன் 4 பெண்கள் அடங்குவதுடன் இம் மாதத்துடன் தாக்குதல் நடாத்தி 6 மாதங்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours