புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோகணேசனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ரிஸ்கான் முஹமட் தலைமையிலான இளைஞர்கள் குழு அம்பாறை மாவட்டம் முழுவதிலும் சூறாவளி பிரசாரங்களை முடுக்கி விட்டு உள்ளது.

இவர்கள் அன்னம் சின்னம், சஜித்துக்கு ஆதரவான துண்டு பிரசுரம் ஆகியவற்றை கைகளில் ஏந்தியவர்களாக வீடுகள், கடைகள், பொது இடங்கள் போன்றவற்றுக்கு மக்களை தேடி சென்று சஜித்துக்கு ஆதரவான பிரசாரங்களை முன்னெடுத்து உள்ளார்கள்.

மக்கள் இவர்களுக்கு அமோக வரவேற்பு வழங்குவதையும்,இவர்களின் விளக்கங்களை கவனமாக செவிமடுப்பதையும் அவதானிக்க முடிகின்றது




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours