(சா.நடனசபேசன்)

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மீது காடையர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களினால்
கறுப்புபட்டி அணிந்து கவனயீர்ப்பு போட்டம் இன்று திங்கட்கிழமை(4)நண்பகல் 12.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெறவுள்ளது.


மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் அலுவலகத்திற்கு சென்ற பிராந்திய செய்தியாளரும்,காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவருமான ஊடகவியலாளர்  ஒருவர் தாக்கப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றார்.இவ்வாறு ஊடகவியலாளர் காடைத்தனமாக தாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கிடைக்கப்பதற்கும்,இவ்வாறு தாக்குதல் நாடாத்தியவரை பொலிசார் கைது செய்து சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவயீனர்ப்பு போராட்டம் முன்னெடுக்கவுள்ளது.இவ் கவனயீர்ப்பு ஆட்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊடகவியளார்களும் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்புக்களையும் தெரிவிக்கவுள்ளார்கள்.

மட்டக்களப்பு பிராந்திய செய்தியாளர் முகமட் சஜி என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டங்கள் தொடர்பிலான தகவல்களைப் பெறுவதற்காக காத்தான்குடியில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்திற்கு சென்றபோதே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அதிர்வு அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் குறித்த ஜனாதிபதி வேட்பாளர் நேற்று முன்தினம் தோன்றி உரையாடிய நிலையில் அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பில் கூறியே இந்ததாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது அரசாங்க தொலைக்காட்சி செய்திப்பிரிவின் முகாமையாளர் இர்பான் முகமட்டுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்து தம்மீது தாக்குதல் நடாத்தியதாக தாக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்தார்.

தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் ஊடகவியலாளர் சஜியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் சென்று பார்வையிட்டதுடன் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்களுக்கு தமது கண்டனத்தினையும் தெரிவித்துள்ளார்கள்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours