ஜனாதிபதி தேர்தல் கடமையில் வாக்கு கணக்கெடுக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருக்கான பயிற்சிக்கருத்தரங்கு இன்று காலை 10 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகக்கேட்போர் கூடத்தில் தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இடம் பெற்றது.
ஏதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்டுள்ள அனைத்து உதவித்தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் வாக்கெண்ணும் பணியானது பொறுப்பானதும் கடமைப்பணியாக இருப்பதனால் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவத்தாட்சி அலுவலர் வேண்டுகோள் விடுத்தார்வாக்குச்சீட்டுக்கணக் கெடுக்கும் பணிக்காக ஒரு பிரதம கணிக்கெடுப்பாளரும் அவருக்கு உதவியாக ஆறு சிரேஸ்ட கணக்கெடுப்பாளர்களும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்கள் இருபது பேயரும் ஒவ்வொரு கணக்கெடுப்பு நிலையங்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஏதிர்வரும் 15ம் திகதி 27 வழங்கல் பிரிவுகளில் இருந்து வாக்குப்பெட்டிகள் விநியோகம் செய்யப்படவுள்ளது பின்னர் 16ம் திகதி பிற்பகல் 5.00மணிக்கு வாக்குப்பெட்டிகள் ஏற்கும் பணிகள் ஆரம்பமாகும் பின்னர் வாக்குகெண்னும் பணிகள் 7மணிக்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தேர்தல் உதவி தெரிவத்தாட்சி அலுவலர் ஆர்.சசிலன் தெரிவித்தார்.ஏதிர்வரும் எட்டாவது ஜனாதிபதி தேர்தலை நீதியானதும் நேர்மையானதாகவும் ஒரு நிலைமையுடனும் அனைத்து உத்தியோகத்தர்களும் பணியாற்ற வேண்டும் பக்கசார்பில்லாது பணியினை முன்னேடுப்பது இத்தருனத்தில் அவசியமானதாக கருதப்படுவதாக என தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார்.கணக்கெடுப்பு நிலையங்களுக்கு 5 முகவர்கள் வீதம் ஒவ்வொரு நிலையத்திற்கும் அனுமதிக்கப்படும் அஞ்சல் வாக்கெடுப்பு நிலையத்திற்கு இரண்டு முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
800 வாக்காளர்களுக்கு குறைந்த வாக்கெடுப்பு நிலையங்களுக்கு பிளாஸ்டிக் வாக்குப்பெட்டியும் 800க்கும் 1500 வாக்காளர்கள் உள்ள நிலையங்களுக்கு நடுத்தர காட்வோட் பெட்டியும் 1600 வாக்கிற்கு அதிகமாகவுள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்கு பெரிய காட்வோட் பெட்டிகளும் வழங்கப்படவுள்ளதாக தேர்தல் உதவி தெரிவத்தாட்சி அலுவலர் ஆர்.சசிலன் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours