காரைதீவு  நிருபர் சகா

இலங்கையில் சிறுபான்மையினமக்கள் சுதந்திரக்காற்றை சுவாசித்து நிம்மதியாக வாழவேண்டுமானால் மனிதாபிமானமுள்ள சஜித்தை ஆதரிப்போம்.

இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம்  (13) மாலை  காரைதீவில்  நடைபெற்ற  மக்கள் சந்திப்பில் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
காரைதீவு விளையாட்டுக்கழகம் நிருமாணித்துவரும்உள்ளக விளையாட்டரங்கின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட பின்னர் கழகத்தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார்.

இக்கூட்டம் கழகத்தலைவர் எல்.சுரேஸ் தலைமையில் நடைபெற்றது. கழகபோசகர் வி.ரி.சகாதேவராஜா கழகவரலாறு மற்றும்உள்ளகவிளையாட்டரங்கு தொடர்பில் உரையாற்றினார்.
அவர்மேலும் கூறியதாவது:

அமெரிக்க பிரஜைக்கு இலங்கையர் வாக்களிப்பது அவசியமா? எமது தமிழ் முஸ்லிம் பெரும்பாலான கட்சிகள் ஒருங்கிணைந்து தரமான வேட்பாளர்சஜித்தை ஆதரவளிப்பதென்று தீர்மானித்துள்ளன.
குறிப்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமது ஆதரவைத்தெரிவித்ததன் மூலம் சஜித்தின் வெற்றி மேலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே நாம் இனிவாக்களிப்பதில்ஆர்வம் காட்டவேண்டும்.
வாக்களிப்பதில் காட்டப்படும் அலட்சியம் சர்வாதிகாரிகள் ஆட்சிபீடமேற வழிவகுக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கட்டாயம்மேலும்பலம் பெறவேண்டும். தலைவர் சம்பந்தர் ஜயா காலத்தில் சிறுபான்மை மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அவரது கண்ணுக்கு பின்னர் என்னநடக்கும்என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.


எமது தலைவர் அஷ்ரப் மரணித்ததன்பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் எப்படி பிரிந்தது என்பதை அனைவரும் அறிவோம். அதன்காரணமாக முஸ்லிம்சமுகத்தை பெரும்பான்மையினர் கறிவேப்பிலையாகப்பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அவ்வாறு தமிழ்ச்சமுகம் செல்லக்கூடாது. சிறுபான்மையினம் குறிப்பாக தமிழ் முஸ்லிம் சமுகங்கள் ஒன்றிணைந்துபயணிக்காவிடின் தீர்வு எட்டாக்கனியாகிவிடும்.

சிறுபான்மையினம் ஒற்றுமையாகவிருந்தால் பலவிடயங்களைச்சாதிக்கலாம்.
காரைதீவுக்கும்நிந்தவூருக்குமிடையே பாரம்பரியமான நல்லுறவு நிலவிவந்ததுண்டு. என்னைப்பொறுத்தவரையில் காரைதீவு n
சொறிக்கல்முனை களுவாஞ்சிக்குடி போன்ற பல பகுதிகளின் ஆஸ்பத்திரிகளுக்கு நிறைய உதவிகளை வழங்கியுள்ளேன். ஆனால் அரசியலுக்காக கோடீஸ்வரன் எம்.பி. என்னை இனவாதியாக காட்ட பேசுவார். நான் ஒருபோதும்அப்பிடியில்லை.
எமதுதலைவர்கள்பேசிப்பேசி மிகவும் கவனமாக இரு சமுகங்களையும் வழிநடாத்திவருகிறோம். எமக்குள்ள இன்றைய பிரச்சினை கல்முனை வடக்கு பிரதேச செயலகவிவகாரமே. இதனை மிகவும் கவனமாக கையாளவேண்டும்.எமது தலைவர்களான சம்பந்தன் ஹக்கீம் ஆகியோh
ர் காலத்திலே அதனை விட்டுக்கொடுப்புடன் தீர்வுகாணவேண்டும்.

அதனை அப்படியேவிட்டுவிட்டால் எதிர்கால சந்ததி தேவையில்லாமல்முட்டிமோதிக்கொள்ளவழிவகுக்கும். அதற்கு ஒருபோதும்இடமளிக்கக்கூடாது. 

யுத்தம் வெல்லப்பட்டபிறகு 2015வரை நாட்டில் என்ன நடந்தது என்பதை நாமனைவரும் அறிவோம். எமதுமக்கள் அழித்தொழித்து சின்னாபின்னமாக்கப்பட்டார்கள். கடத்தல் நிலஅபகரிப்பு காணாமல்ஆக்கப்பட்டார்கள் மக்கள்  ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களைக்கூற முடியாது. அப்படிக்கூறினால் மறுநாள் பிணம்.

வடக்கு கிழக்குவாழ் தமிழ்முஸ்லிம் மக்கள் சஜித் பிரேமதாசதான் எமது ஜனாதிபதி என்பதை என்றோ தீர்மானித்துவிட்டார்கள். எனவே ஊரோடு ஒத்துப்போகவேண்டும். ஆதலால் நாமும் சஜித்தையே ஆதரித்து வெற்றியின் பங்காளராவோம். என்றார்.

உள்ளகவிளையாட்டரங்கு அபிவிருத்திப்பணிக்கு கட்டாயம் உதவுவதாக உறுதியளித்தார்.
முன்னாள் தலைவர்களான யு.ரஜிநாதன் ச.நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை கழகபிரதிநிதி பத்மநாதன் மதி தொகுத்துவழங்கினார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours