(காரைதீவு  நிருபர் சகா)
இன்று(16) நடைபெறவிருக்கும்  எட்டாவது ஜனாதிபதித்தேர்தலுக்காக அம்பாறை மாவட்டம் தயார்நிலையிலுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று சகல 523 வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப்பெட்டிகள் சிரேஸ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.அவை அம்பாறை ஹாhடி சிரேஸ்ட தொழினுட்பகல்லூரி வளாகத்திலிருந்து காலைமுதல் விநியோகம் செய்யப்பட்டது.

மாவட்டத்தில் 523 வாக்களிப்பு நிலையங்களும் 53 வாக்கெண்ணும் நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்ரமரத்ன சகலஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொத்துவில் சம்மாந்துறை அம்பாறை ஆகிய 4 தொகுதிகள் உள்ளன.
கல்முனைத்தொகுதியில் 74வாக்களிப்புநிலையங்களும் பொத்துவில் தொகுதியில் 177வாக்களிப்புநிலையங்களும் சம்மாந்துறை தொகுதியில் 93வாக்களிப்பு நிலையங்களும் அம்பாறை தொகுதியில் 179நிலையங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன.

மாவட்டத்தில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ண 38நிலையங்களும் தபால்வாக்குகளை எண்ண 15நிலையங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன. இவையனைத்தும் அம்பாறை ஹார்டி தொழினுட்பக்கல்லூரி கட்டடத்தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours