ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கினால் அதற்கு கைமாறாக முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் விடுதலை மற்றும் உதவிகளை செய்து தருவதாக ஜக்கிய தேசிய கட்சி மாவட்ட இணைப்பாளர் தம்மிடம் அழைப்பு விடுத்துள்ளார். எனவே இந்த ஏமாற்ற அரசியலுக்குப் பின்னால் சென்று தன்னை தக்கவைத்துக் கொள்வதற்கு விரும்பாத ஒரு தலைவர் எமது தலைவர் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வாவிக்கரையில் அமைந்துள்ள தலைமைக்காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(10)இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்திலே பூ. பிரசாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இளைஞர்கள் விழிப்படைந்து இருக்கின்றார்கள்.கிழக்கில் இளைஞன் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக இன்று இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக வாகரைப் பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர் முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் இருப்பை பாதுகாப்பதற்கான தலைமைத்துவம் என்பதை உணர்ந்து கோட்டபாய ராஜபகஷ தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்கின்ற யதார்த்தத்தை உணர்ந்து இன்று சம்பிரதாயபூர்வமாக கோட்டபாய ராஜபக்ஷவை ஆதரிப்பது என்ற முடிவினை நன்றாக படித்த புத்திஜீவிகள் இருக்கின்ற ஒரு உறுப்பினர் என்று எடுத்து இருக்கின்றார்.
அந்த வகையில் இவரைப் போன்று பல தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு அதேபோன்று ஏனைய கட்சி குழுக்களில் போட்டி போட்டு பிரதேசங்களில் வெற்றி பெற்று உறுப்பினர்களும் நீண்ட காலமாக அரசுக் கட்சி தமிழ் தேசியம் பேசிய தலைமை கூட இன்று கிழக்கு மாகாணத்தின் தன் இருப்பை கருத்திற்கொண்டு கோட்டபாய ராஜபக்ஷவை ஆதரிப்பதற்காக தமிழ் மக்கள் கட்சியை கூட்டாக இணைந்து இருக்கின்றார்கள்.
கடந்த வாரங்களாக எட்டாவது ஜனாதிபதி தேர்தலை தீர்மானிப்பதற்கான இரண்டு வேட்பாளர்களும் முன்னணியில் இருக்கிற இரண்டு வேட்பாளர்களும் பேசுபொருளாக கொண்டிருப்பது தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையான் அவர்களே.
தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெளிவாகச் சொல்லியிருந்தார் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு பிள்ளையான் போன்ற முதலமைச்சர்கள் வரவேண்டும்.அவர்கள் மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறான முதலமைச்சர் வரவேண்டும் என்றார்.
அதேவேளை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நான்கு வருடங்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சிறையில் இருக்கின்ற ஒருவர் எனவும் அவர் முதலமைச்சராக வருவாரர் பார்ப்போம்.படித்த அனுபவம் உள்ள சிங்களவர் அல்லது இஸ்லாமியர் அல்லது தமிழர் முதலமைச்சராக வர முடியும் என மிக காரசாரமாக பல்வேறு வகையான விமர்சனங்களையும்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு கடிதத்தினை அவர் எழுதியிருந்தார் கிழக்கு மாகாணத்தின் பிள்ளையான் உடன் நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டும் என்கின்ற வகையில் தலைவர் சி.சந்திரகாந்தன் சார்பான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பகிரங்கமாக சந்திரகாந்தன் வசைபாடிய சந்திரகாந்தன் பின்னால் மக்கள் இல்லை என்று குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதம மந்திரியுமான ரணில் விக்ரமசிங்க சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சிறைச்சாலைக்கு சென்று தலைவர் சந்திரகாந்தனை சந்திக்க வேண்டும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கலந்துரையாட வேண்டுமென்று கேட்டிருந்தார்
அதற்கு தலைவர் சி.சந்திரகாந்தன் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் சம்பந்தமாக பேசுவதாக இருந்தால் கட்சியின் செயலாளர் உடனும் கட்சிகளுடனும் கதைத்து விட்டு வாருங்கள் அதன்பிறகு வருமாறு அவரை அனுப்பியிருந்தார. இதனையடுத்டது வியாழக்கிழமை கட்சியின் தலைமைச் செயலகத்திற்கு தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வந்து என்னை சந்தித்தார்.
அவர் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக தலைவர் பிள்ளையானை சந்திக்க சிறைக்கு சென்றிருந்ததாகவும் ஜக்கிய தேசிய கட்சி மேல் மட்ட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அமைச்சர்கள்;. முன்னாள் முதலமைச்சர் சி;.சந்திரகாந்தனை சிறைக்குள்ளே சந்தித்து ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும். இது தொடர்பாக பேசி வருமாறு அனுப்பியுள்ளதாகவும் அது தொடர்பாக சிறைக்குச் சென்றிருந்ததாகவும்
கிழக்கு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் சந்திரகாந்தன்;; சார்பாக குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிற்கின்றார்கள் உங்களது ஆதரவினை எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குங்கள் நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் சந்திரகாந்தன் மீதான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி விடுவிப்பதாகவும் கேட்டு இருந்தனர்.
அப்போது அவரிடம் நான்கு வருடங்களில் விடுவிக்க முடியாததை இரண்டு நாட்களில் எவ்வாறு உங்களால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்றேன் அப்போது நாங்கள் அவரை வெளியில் கொண்டுவர ஏற்பாடு செய்வோம் .வேட்பாளராக இறக்கி இருக்கின்ற சஜித்துக்கு ஆதரவு வழங்குவீர்களா. தேவையான உதவிகளை செய்வதாகவும் இதற்கு இரண்டுநாள் அவகாசம் தருமாறு கேட்டிருந்தார்.
கடந்த நான்கு வருடங்களாக மக்களுக்காக கிழக்கு மாகாணத்தை விடுவித்து அபிவிருத்தி செய்வதற்கு முன் வந்தமைக்காக நல்லாட்சி அரசு கொடுத்த பாடமாக மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
சட்டத்தின் அடிப்படையிலேயே அவர் வருவதற்கு விருப்பம் தெரிவித்து சட்டப்படி நீதியை நம்பி இலங்கை நாட்டு நீதிச் சட்டத்தை நம்பியே இருக்கிறாரே தவிர அரசியலை நம்பி அவர் இல்லை. அரசியல்வாதிகளுக்கு பின்னால் அல்லது மக்களை ஏமாற்ற அரசியலுக்குப் பின்னால் சென்று தன்னை தக்கவைத்துக் கொள்வதற்கு விரும்பாத ஒரு தலைவர் என்ற அடிப்படையில் மிகத் தெளிவாக சொல்லுங்கள்
சந்திரகாந்தன் பிள்ளையான் கிழக்கு மக்களுக்காக பயணிப்பானே தவிர இவ்வாறான அரசியல் சித்து விளையாட்டுகளை வைத்து தன்னை காப்பாற்றிக் கொள்பவனல்ல.தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நீதியாக சட்டத்தின் அடிப்படையில் தான் வழியில் வருவேன் அதுவரைக்கும் தனது விடுதலைப் புரட்சியின் கடைசி மனிதன் இருக்கும் வரை அதற்காக பயணிப்போம் என்று சொல்லும்படி குறிப்பிட்டார் என தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours