காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம்
தேர்தல் பணிக்காகச் சென்ற அதிகாரி ஒருவர் உயிரிழப்பு
சித்ரா பௌர்ணமியில் வேலோடுமலையில் மாபெரும் குபேர வேள்வி! அனைவரையும் அழைக்கிறார் சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ
ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை !
காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றப்போவது யார்?

மகிழவட்டவான் பிரதேசத்தில் மமே/மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி செல்வி தில்லைநாதன் சாரணா 8A,B சித்தியினைப் பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்ககும் பெருமை சேர்த்துள்ளார் இம்மாணவியின் உயர்கல்விக்காக புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் சார்பில், ஊறணியைப் பிறப்பிடமாகவும் இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.காத்தமுத்து லோகேந்திரன் ரூபா: 25000.00 வழங்கி பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.எம்.கருணதாசன் தலைமையில் கிராம அபிவிருத்திச் சங்கமும் இணைந்து இன்று (04.11.2019) திங்கட் கிழமை பாடசாலை முன்றலில் இடம்பெற்றது மேலும் சமூக ஆர்வலர்கள் கிராம அபிவித்திச் சங்கத் தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஆதவில் கிராம அபிவிருத்தி என்ற தலைப்பில் மண்முனை மேற்கு பிதேச செயலகப் பிரிவில் உள்ள நரிப்புல்லுத்தோட்டம், மகிழவட்டவான் நெல்லூர். விழாவட்டவான் பங்குடாவெளி, சொறுவாமுனை தளவாய் மற்றும் மணிபுரம் ஆகிய கிராம அபிவிருத்திச் சங்கங்கங்களினூடாக, மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையில் உள்ள பாடசாலையின் நிலைமை கருதி பிரதேச தமிழ் மக்களின் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் முதல் கட்டமாக நரிப்புல்லுத்தோட்டம், மகிழவட்டவான் கிராமங்களில் 2016ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுவர் தினத்தை முன்னிட்டு 2 வது குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு தலா ரூபா 10,000.00 வும்; பிள்ளை பராமரிப்பிற்காக 18 வயது வரை மாதம் தோறும் தலா ரூபா 1,000.00 வும் வழங்கி வைக்கப்பட்டு வருகிறத. இத்திட்டமானது மூன்று வருடங்களைக் கடந்த நிலையில் பல பாராட்டுதல்களையும், அதிகப்படியான ஆதரவையும் பெற்றுவந்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours