(சா.நடனசபேசன்)
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரமதாசவை ஆதரித்து ஐக்கியதேசியக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதியின் அமைப்பாளர் முன்னாள்  அமைச்சர் சோ.கணேசமூர்த்தியின் ஏற்பாட்டில் துறைநீலாவணைக்கிராமத்தில்  தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

துறைநீலாவணைக் கிராமத்தின்  ஐக்கியதேசியக்  கட்சியின்  ஆதரவாளர்களது ஒழுங்கமைப்பில் ஓய்வுபெற்ற கால்நடை வைத்தியர் குமாரசாமி அவர்களது தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை  நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஐக்கியதேசியக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதியின் அமைப்பாளர் முன்னாள்  அமைச்சர் சோ.கணேசமூர்த்தி மற்றும் சஜீத் பிரமதாசவின்  அம்பாரை மாவட்ட இணைப்பாளர் பி.கிந்துஜன், ஐக்கியதேசியக்கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளர் எம்.எம் நிஷாம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரமதாச அவர்களது கொள்கைப் பிரகடனமும் மக்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours