காரைதீவு  நிருபர் சகா


தமிழர்களை கடத்தி சித்திரவதை செய்து முதலைக்கு இரையாக்கியவர்களை மீண்டும் ஆட்சிபீடமேற்றினால் நாடு சுடுகாடாகும். அது தேவையா? எனவே பௌத்ததர்மத்தைக் கடைப்பிடிக்கும் மனிதாபிமானமுள்ள சஜித்தை ஆதரிப்போம்.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன்  நேற்று(12) செவ்வாய்க்கிழமை காலை  அவரது அலுவலகத்தில்  நடைபெற்ற  மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித்பிரேமதாசவை ஆதரித்து நடைபெற்ற சந்திப்பில் அவர்மேலும் கூறியதாவது:

நாம் நம்பிக்கையினடிப்படையில் சஜித்தோடு பேசியுள்ளோம். புலிகள்கூட அப்போது அந்தஅடிப்படையில் பேசினார்கள். எனவே சஜித் ஜனாதிபதியானதும் ஏமாற்றினால் அதற்கு தமிழ்மக்கள் தக்கபதிலடி வழங்குவார்கள்.

யுத்தம் வெல்லப்பட்டபிறகு 2015வரை நாட்டில் என்ன நடந்தது என்பதை நாமனைவரும் அறிவோம். எமதுமக்கள் அழித்தொழித்து சின்னாபின்னமாக்கப்பட்டார்கள். கடத்தல் நிலஅபகரிப்பு காணாமல்ஆக்கப்பட்டார்கள் மக்கள்  ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களைக்கூற முடியாது. அப்படிக்கூறினால் மறுநாள் பிணம்.

2015க்குபின்னர் நல்லாட்சி அரசாங்கம் ஓரளவு நிம்மதியைத்தந்தது. படையினர்வசமிருந்த 85வீதமான காணிகளை விடுவித்தார்கள். சுதந்திரமாக ஊடகவியலாளர்கள் இயங்கினர்.மக்களும் துணிந்து கருத்துரைக்கத்தலைப்பட்டனர்.

தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு புதிய அரசியல்யாப்பு தொடர்பில் 60வீத வளர்ச்சியைக்கண்டது. எனினும் உத்தமனாகவந்த ஜனாதிபதி கடைசியில் மாறிநடக்கமுற்பட்டார்.
கடந்த அரசை 100வீதம் நல்லது எனக்கூறவில்லை. எனினும் ஏதோ நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை மறுக்கமுடியாது.

இலங்கையின் இருபிரதான வேட்பாளர்களும் பௌத்தமதவாத கருத்திலே ஊறியவர்கள். பௌத்த மதகுருமாரின் கட்டளைக்கிணங்கவே நடப்பார்கள். அது வழமை
எனினும் சிறந்த பௌத்தமதபோதனைகளை முறைப்படி பின்பற்றுகின்றன அல்லது கடைப்பிடிக்கின்றவர் சஜித் மட்டுமே. மனிதாபிமான சிந்தையுள்ளவர்கள்.வடக்கு கிழக்கில் நியாமான வீடுகளை கட்டிக்கொடுத்தவர்.

பல அமைச்சர்கள் அவரவர் இனங்கள் வாழுகின்ற இடங்களையே அபிவிருத்தி செய்தார்கள். ஏனையோரை திட்டமிட்டுப்புறக்கணித்தார்கள். எமது பிரதேசம் அதற்கு நல்லசாட்சி.

இலங்கையில் இனமத வாதம் எப்போது பூண்டோடு அழிக்கப்படுமோ அன்றுதான் இலங்கைக்கு சுபீட்சம். அது நடக்குமா? எனவே குறைந்த பட்சகுணமுள்ளவர்களுடனாவது கூட்டுச்சேரவேண்டும்.
பௌத்ததர்மத்தைமுறைப்படிக்கடைப்பிடிக்காத தேரர்கள் சிலரின் அடாவடித்தனத்தால் நாட்டில் நிரந்தரமான இனநல்லிணக்கம் கேள்விக்குறியாகிக்கொண்டேபோகிறது.

புதிய ஜனாதிபதியாக சஜித் வந்ததும் ஜ.நா தொடக்கம் எமது நாடுகளின் அழுத்தங்களை வரவழைத்து எமது பிரச்சினைகளை தீர்க்கமுயற்சிப்போம். அவரும் அதற்கு இணங்குவார். இந்தியாவின் வகிபாகம் பாரியது. இலங்கையோடு நட்புறவுக்கு அப்பால் தமிழ்மக்களது துன்பியல் சரித்திரத்தை நன்கு உணர்ந்த நாடு. எனவே அவர்களது ஆதரவையும் நாடிநிற்கிறோம்.

வடக்கு கிழக்குவாழ் தமிழ்முஸ்லிம் மக்கள் சஜித் பிரேமதாசதான் எமது ஜனாதிபதி என்பதை என்றோ தீர்மானித்துவிட்டார்கள். எனவே ஊரோடு ஒத்துப்போகவேண்;டும். ஆதலால் நாமும் சஜித்தையே ஆதரித்து வெற்றியின் பங்காளராவோம். என்றார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours