கோதாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்து மூன்று நாளில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம்தரம் உயர்த்தி தரப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்கொள்கை வகுப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா மக்கள் இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் கல்முனையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஸவை ஆதரித்து நடத்தப்பட்ட பிரசார கூட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கலந்து கொண்டு பேசியபோது இவர் தெரிவித்தவை வருமாறு:-
தமிழ் தேசிய கூட்டமைப்பு 2015 ம் ஆண்டு எங்களை தோற்கடித்தது. ஆனால் தமிழ் மக்களுக்கு எதையும் பெற்று கொடுக்கவில்லை. மாறாக தங்களின் சொந்த பைகளை நிரப்பி கொண்டார்கள். அதை மாத்திரமேதான் செய்தார்கள்.
இந்த நல்லாட்சியில் எல்லாமே பயமயம்தான். வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கு நாட்டு மக்கள் அஞ்சுகின்றனர். பாடசாலைகளுக்கு செல்ல மாணவர்கள் அஞ்சுகின்றனர். இந்த அச்ச நிலைமையை இல்லாமல் செய்ய கோத்தா ஒருவரால்தான் முடியும். அதற்காகவே அவர் காத்திருக்கின்றார்.
கோதாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்து மூன்று நாளில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம்தரம் உயர்த்தி தரப்படும். அதே போல வருகின்ற 01 ஆம் திகதிக்குள் ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு அரசாங்க தொழில் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். படித்த இளையோர்களை தற்போதைய அரசாங்கம் புறக்கணித்து நடப்பதை காண முடிகின்றது.
இந்த நாட்டில் இருந்து வருகின்ற சிறுபான்மை, பெரும்பான்மை என்கிற பேதத்தையும் எமது ஆட்சியில் இல்லாதொழிப்போம். அந்த மரபு உடைத்தெறியப்பட்டு சகோதர இனத்தை சேர்ந்தவர்களாகவே ஒவ்வொரு இனத்தவரும் நடத்தப்படுவார்கள்.
இந்த நாட்டில் இருந்து வருகின்ற சிறுபான்மை, பெரும்பான்மை என்கிற பேதத்தையும் எமது ஆட்சியில் இல்லாதொழிப்போம். அந்த மரபு உடைத்தெறியப்பட்டு சகோதர இனத்தை சேர்ந்தவர்களாகவே ஒவ்வொரு இனத்தவரும் நடத்தப்படுவார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours