(சா.நடனசபேசன்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் 41வது தேசிய இளைஞர் விருது விழாவில் 101 பிரிவுகளில் மும்மொழிகளிலும் முதலிடம் பெற்ற 166 இளம் கலைஞர்களுக்கான விருதுகள் (05/11/2019) தாமரைத்தடாக கலையரங்கில் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது.
இதில்
தமிழ்மொழிமூல அறிவிப்பாளர் போட்டியில் நாவிதன்வெளியை சேர்ந்த குலசிங்கம் கிலசன் முதலிடத்தைப் பெற்று சிறந்த அறிவிப்பாளருக்கான விருதினை பெற்றுக் கொண்டார். இது நாவிதன்வெளி பிதேசத்துக்கு கிடைத்த முதல் தேசிய விருதாகும். இவர் பாடசாலைக் காலம் முதலே அறிவிப்புத் துறையில் ஆர்வம் கொண்டு தன்னை வளப்படுத்தி நாவிதன்வெளி கல்முனை பிரதேசங்களில் அதிக நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக செயற்பட்டு வருவதோடு கவிதைத் துறையிலும் ஆர்வத்தோடு செயற்படுபவர் அறிவிப்பு துறையில் இன்னும் சாதிக்க வேண்டுமென்ற கனவோடு முயன்று வருபவர் என்பதோடு தற்போது விவசாய திணைக்களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
அதேவேளை முதல் மூன்று இடங்களும் கிழக்கு மாகாணத்திற்கே கிடைத்துள்ளமையும் பெருமை சேர்க்கின்றது. இரண்டாமிடம் மட்டக்களப்பை சேர்ந்த செல்வி அகல்யா மூன்றைமிடம் சம்மாந்துறை இன்ஷாஃப் ஆகியோருக்கு கிடைத்துள்ளது
Post A Comment:
0 comments so far,add yours