(காரைதீவு நிருபர் சகா)
இலங்கை வரலாற்றில் தமிழ்மக்கள் மிகவும் கொடுரமாக தாக்கப்பட்டு படுமோசமாகப் பாதிக்கப்பட்டது ஜக்கிய தேசியக்கட்சி அரசு காலத்திலேயே என்பதை யாரும் மறுக்கமுடியாது. எனவே எனது ஆதரவு கோத்தாவிற்கே.
இவ்வாறு தமிழரசுக்கட்சியின் மிகநீண்டகால மூத்த உறுப்பினரும் முன்னாள் கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவருமான குஞ்சித்தம்பி ஏகாம்பரம் (வயது 87)தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனையின் மட்டு.மாவட்ட இளைஞர்அணித்தலைவர் ரி.ஹரிப்பிரதாப் மற்றும் கல்முனை நிமால் தலைமையிலான இளைஞர் குழுவினரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் கல்முனையில் இடம்பெற்றன.
அச்சமயம் கருத்துவெளியிட்ட மூத்தஉறுப்பினர் கு.ஏகாம்பரம் மேலும் கூறியதாவது:
அம்மா என்றாலும் பெண்தான் மகள் என்றாலும் பெண்தான். தமிழ்மக்களைப்பொறுத்தவரை சுதந்திரக்கட்சியும் ஒன்றுதான் ஜ.தே.கட்சியும் ஒன்றுதான். அதேபோல் மஹிந்தவும் சரி ரணிலும் சரி.இருவரும் ஒன்றுதான்.
அனைவரும் சிறுபான்மையினரைப்பிரித்து துரோகம் செய்தவர்களே. அடக்கிஆண்டவர்களே.
எனினும் இன்றையநிலையில் தேர்தலை பகிஸ்கரிக்காது வாக்களிக்கவேண்டும். எனவே இந்த இருதரப்பில் ஓரளவாவது யார் நல்லவர் என்று பார்த்துவாக்களிக்கவேண்டியது எமது கடமை. எமது தலைவர்கள் நிதானமாக யோசிக்கட்டும்.
தமிழ்மக்களைப்பொறுத்தவரை மிக மோசமான பாதிப்புகளை விளைவித்த காலம்ஜ.தே.கட்சி யுகம் என்பது நாமனைவரும் அறிந்த உண்மை.
கறுப்பு ஜூலை கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு பார்வையாளராகஇருந்தமை இனங்களிடையே வன்முறைகளைத்தூண்டிவிட்டு பார்த்திருந்தமை தமிழ்இளைஞர்களின் கண்களைத்தோண்டி அராஜகம் செய்தமை 1990களில் கொளக்கொட்டியாவை அனுப்பி பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களையும் தமிழர்பிரதேசங்களையும் கபளீகரம் செய்தமை உள்ளிட்ட பல அட்டுழியங்கள் நடந்தேறியது இந்த ஜ.தே.யுகத்திலேதான்.
1951களில் சமஸ்டியை தரபுறப்பட்டவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக் க . அப்போது பாதயாத்திரைசெய்து பண்டாசெல்வாஒப்பந்தத்தை கிழித்தெறிந்தவர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தன. அவர் வேறுயாருமல்ல பிரதமர் ரணிலின் மாமனார்.
தமிழர்களின் சாத்வீகப்போராட்டத்தை அடக்கியவர் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச. அவரின்மகனே இன்று மறுவடிவம் தாங்கிவருகிறார்.
இதுவரை சிறுபான்மையினரை பாதுகாப்போம் என்று ஒருவார்த்தையாவது அவர் சொன்னாரா? இல்லை . கோத்தா ஆவது சொன்னார்.
தமிழர்தப்பிப்பிழைக்கவேண்டுமானா ல் இந்த சமகால ஆட்சியை மாற்றியமைக்கவேண்டும். எனவே எனது பூரண ஆதரவு கோத்தாபாயவிற்கே. தமிழ்மக்களும் அதனையே தெரிவுசெய்யவேண்டும்.இல்லாவிடி ல்இருண்டயுகத்திற்கு செல்லவேண்டிநேரிடும்.
Post A Comment:
0 comments so far,add yours