ராஜபக்ஸ குடும்பத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள் இருந்தாலும் சரி , மொட்டு கட்சிக்குள் இருந்தாலும் வேறு யாரும் வேட்பாளர்களாக வர முடியாது. வேட்பாளராக இருக்கும் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. இது தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கும் நடந்தது இலங்கை பிரஜையா இல்லையா என்று இன்னும் அந்த வழக்கு சரியாக எடுபட வில்லை சிறை செல்ல இன்னும் காலம் இருக்கிறது. என சம்மாந்துறையில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாட்டில்அசாத் சாலி தெரிவித்தார்.
அவ் வழக்கிற்கு பயந்து மஹிந்த ராஜபக்ஸ தினேஸ் குணவர்தனவின் பெயரையோ , வாசுதேவ நாணயக்கார அவர்களின் பெயரையோ முன் மொழியவில்லை 75 வயது அண்ணன் ஷமல் ராஜபக்ஸவின் பெயரைதான் வழங்கினார்.
ராஜபக்ஸ குடும்பம் பெளத்த விகாரைக்கு சென்றால் அவர்கள் இருந்து கொண்டு கூழ் குடித்தால் அந்த கட்சியில் இருக்கும் ஏனையவர்கள் நின்றுகொண்டு கூழ் குடிக்கிறார்கள்.அனால் ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்த வரையில் போராட்டதிற்கு மேல் போராடி பிரதேச சபை மட்டதிலிருந்து சஜித் பிரேமதாஸ அவர்கள் வேட்பாளராக நிற்க வேண்டும் என மக்கள் அலை எழுந்தது.
சிறுபான்மை மக்களை நோகடித்து பெரும்பான்மை மக்களை சந்தோச படுத்தும் இந்தியாவில் மோடி வெற்றி பெற்றது போன்ற அரசியல் நுணுக்கங்களைதான் ராஜபக்ஸ குடும்பமும் கையாளுகின்றனர்.
சனாதிபதி பேசியதாக கானொளி ஒன்றை காட்டி பேசுகையில் அளுத்ஹம தாக்குதலின் போது நான் ஒரு அமைச்சராக இருந்தேன் ராஜப்க்ஸ குடும்பம்தான் வழி நடார்தினார்கள். அதன் பின்னர் இந்த அரசாங்கம் இருக்கும் போது மூன்று பிரச்சினைகள் வந்தது திஹன, மினுவாங்கொட,பேருவள போன்ற இடங்களில் இதை நான் செய்வேனா என சனாதிபதி கேட்கின்றார் . இதை செய்தது அரைவாசிக்கு மேல் மொட்டு காரர்கள்தான் இதை முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் போய் சொல்ல வேண்டும் என சொன்னார்.
ஈஸ்டர் 21 தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களிடம் ஆயுதம் இருக்கிறது பள்ளிவாசல்,மதரஸாக்கல் அனைத்தும் சோதனை செய்யபட வேண்டும் என்னுடைய அரச்சாங்கம் வந்த பின்னர் அதைதான் முதலில் செய்வேன் என மஹிந்த வாக்குறுதி கொடுக்கிறார். சிங்கள மக்களிடம் ஒரு வாக்குறுதியும் தமிழ் மக்களிடம் ஒரு வாக்குறுதியும் வழங்குகிறார்.
எங்களுக்கு புதிதாக ஒரு தகவல் கிடத்திருக்கிறது ராஜபக்ஸ குடும்பத்தின் கூட்டதிற்கு செல்லும் கூட்டம் ஒரே மக்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு 2000 ரூபாய் மதுவிற்காக கொடுத்து தான் கூட்டி செல்கிறார்கள் அவ்ர்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் தெரியுதில்லை மஹிந்த ராஜபக்ஸவும் தெரியவில்லை .சஜித் பிரேம தாஸவின் கூட்டதிற்கு மக்கள் தானாகவே கூடுகின்றனர்.மொட்டு பக்கமே அனைத்து இனவாதிகளும் இருக்கின்றனர்.என தெரிவித்தார்
Post A Comment:
0 comments so far,add yours