(க. விஜயரெத்தினம்)
சரத் பொன்சேகாவை எப்பொழுது ஆதரித்ததோ அப்பொழுதே போர்க்குற்றம் தொடர்பாக பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அருகதையை இழந்து விட்டது என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தின் குறிப்பிட்டார் திகிலிவெட்டையில் ஞாயிற்றுக்கிழமை(10) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தும் போது குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்...
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து தமிழ் மக்களிடம் எப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கு கேட்கத் தொடங்கிதே அன்றிலிருந்து போர்க்குற்றங்கள் தொடர்பாக பேசுவதற்கு அருகதையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்து வந்துவிட்டது.


போரில் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அதற்காக வாக்களியுங்கள்.போர்க்குற்ற விசாரணை  சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படு  தமிழருக்கான தீர்வு கிடைக்கும் என்பது போன்ற பல வாக்குறுதிகளை வழங்கி 2010ஆம் வருடம் அதே போன்று 2015 இலும்  வாக்கு கேட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் தமக்கு எதனையும் பெற்றுத் தரவில்லை.ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே கிழக்குத் தமிழர்கள் அதிகமாக கொன்று குவிக்கப்பட்டும்,காணாமல் ஆக்கப்படுதல் கலாச்சாரம் ஆரம்பிக்கப்பட்டதும் இக்காலத்திலேயே ஆகும்.

குறிப்பாக கொக்கட்டிச்சோலை படுகொலை,கிழக்கு பல்கலைக்கழக படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை என்று படுகொலைகள் இடம் பெற்றது.இந்த காலகட்டத்திலே ஆகும்.இதனைப் பற்றி ஏதும் பேசாமல் மீண்டும் சஜித் பிரேமதாச விற்கு ஆதரவு கேட்கின்ற மிக மோசமான சூழலை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கொள்கையாக கொண்டிருப்பது மீண்டும் கிழக்குத் தமிழர்களை நட்டாற்றில் விடுகின்ற செயற்பாடாகும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் நிதி நிர்வாக இருப்பும்,பொருளாதார பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இவர்களுக்கான மாற்று நடவடிக்கை மேற்கொள்வதை விடுத்து தொடர்ந்தும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு முட்டுக் கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்பொழுதும் வாடிக்கையாகக் கொண்டுவருகின்றது.இதனைமாற்றவேண்டும். அப்போதுதான் கிழக்கு மக்களுக்கு விடிவு காலம் கிடைக்கும் எனவும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours