(த.தவக்குமார்)
எதிர்வரும் பதினாறாம் திகதி நடைபெறவிருக்கும் இந்த ஜனாதிபதி தேர்தலின் வெற்றியினை எங்களது வட,கிழக்கு தமிழர்களே தீர்மானிக்கின்ற நாளாக அன்றைய தினம் அமையப்போகின்றது கட்டாயமாக சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது இதற்கான காரணம் எங்களது உரிமைக்காக போராடி வந்த போராட்;ட அமைப்பை சிதறடித்து ஆயிரக்கணக்காண தமிழ் மக்களை கொன்று குவித்தவர்தான் இந்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய அவர்கள் என பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பட்டிருப்பு தொகுதியில் உள்ள மண்டூர் பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் புதிய அலுவலகத்தினை திறந்து வைத்து கட்சி உறுப்பினர்கள்,பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இறுதி யுத்தத்தின் போது சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தது ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் அவர்களின் உயிர்களை இழக்கவேண்டிய நிலை ஏற்படும் இப்பிரதேசத்தில் குண்டுகளை வீசக்கூடாது என எச்சரிக்கை விடுதும் தடைசெய்யப்பட் குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான உயிர்களை அழித்தனர்
1983 ஆம் ஆண்டு கலவரத்தின் போது மட்டக்களப்பு தமிழர்,யாழ்ப்பாணத்து தமிழர்,மலையகத்தழிழர் என பார்க்கப்படவில்லை அனைவரது உடமைகளும் உயிர்களும் பொருளாதார மையங்களும் நாசமாக்கப்பட்டது.அன்று எங்களது தமிழ் மக்களை கொடூரமானமுறையில் கொன்று குவித்தவர் இன்று எங்களது தமிழ் மக்கள் மத்தியில் வந்து வாக்கு கேட்கின்றார் இது எப்படியான விடயம் .
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அவர்களின் கைக்கூலிகளாக இருந்த பிள்ளையான் மற்றும் கருணா அம்மான் கோன்றவர்கள் இவர்களுடன் இணைந்து ஒரே இனத்தைச் சேர்ந்த எங்களது தமிழ் மக்களை கொன்று குவித்தவர்கள்தான் அவர்கள் கிழக்கு பல்கலைகழகத்தின் உபவேந்தர் ரவிந்திரநாத் இப்படிப்பட்டவர்களை கொலை செய்தார்கள் உங்களுக்கு தெரியுமா பிள்ளையானின் சொந்து 520 கோடி ரூபா உள்ளது.இப்படி தமிழ் மக்களை கொடூரமான முறையில் கொடுமைப்படுத்தியவர்கள் அவர்களின் மத்தியில் சென்று வாக்கு கேட்கின்றனர் இது வெட்கமான விடயமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours