இந்தியாவின் கோவை மேட்டுப்பாளையத்தில் மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில்  பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துளனர்.
இந்தியாவின், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவருவதால், தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழையுடனான காலநிலை நிலவுகின்றது. அத்துடன் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் நீலகிரி மாவட்டங்களிலும் கடும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. பகுதியில் பெய்த பலத்த மழையையடுத்து இன்று இன்று அதிகாலை 3.30 மணியளவில் அப்பகுதியிலுள்ள குடியிருப்பின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இவ்வாறு இடிந்து விழுந்த சுவர் அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்கு மேல் விழுந்ததில் வீடுகளில் நித்திரையில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளளனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours