நாவிதன்வெளிப் பிரதேசசெயலகத்தில் 27-12-2019 இன்று நடைபெற்ற பிரதேச கலை இலக்கிய விழாவானது காலை 9.30 மணியளவில்  நாவிதன்வெளிப் பிரதேச செயலக உதவிப்  பிரதேசசெயலாளர் ந.நவநீதராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 



இந்நிகழ்வில்  முதல் நிகழ்வாக மாலையணிவித்து அதிதிகளை வரவேற்கும் முகமாக கோலாட்டம், பொல்லடி நிகழ்வின் போது அழைத்து வரப்பட்டார்கள்.

பிரதம அதிதிகளாக  மாவட்ட உத்தியோகஸ்தர் வி.ஜெகதீஸ்சன் ,பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், கணக்காளர் ஜனாப்.யு.எல்.ஜவாஹிர், நிர்வாக உத்தியோகஸ்தர் கி.யோகேஸ்வரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் அம்பாரை ஜனாப் ரி.எம்.றிமசான், பிறை எப்.எம். நிலையக் கட்டுப்பாட்டாளர் ஜனாப்.அல்.ஹாஜ் பஸீர்.அப்துல்.கையூம்  அவர்களும் கலந்து சிறப்பித்த்கார்கள்.


இந்நிகழ்வின் போது பிரதேச கலை மன்றங்களினால் பல கலை நிகழ்ச்சிகளும்   இடம்பெற்றது. 

அப்போது நாவிதன்வெளிப் பிரதேசத்தில் முதல் முறையாக நூல் வெளியீடு செய்த எழுத்தாளர் வை.கே.ராஜூ அவர்களுக்கு பாராட்டுதலும், பிரதேச மட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப் பட்டார்கள். 



இந்நிகவுகள் அனைத்தையும் நாவிதன்வெளிப் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்  ஏ.எல்.எம்.ஸினாஸ் அவர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத் தக்க விடயமாகும்







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours