தில்லை நாயகம் பிரான்ஸ்

பிரான்சில் ஆழிப் பேரலை நினைவேந்தல் 26/12/2019 நேற்று மாலை பிரான்சில் ஆழிப் பேரலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

இந்நிகழ்வானது. பிரான்சில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால்  தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான செவரன் (Sevran) பகுதியில் நடைபெற்றது. 

பொதுச் சுடரை பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைவர் திரு.கோணேஸ் அவர்கள் ஏற்றி வைக்க, நினைவுச் சுடரை, சுனாமி பேரிடரின் போதான உயிர்மீட்பு நடவடிக்கையொன்றில் சாவடைந்த முல்லைத்தீவு காவல் பணிமனை பொறுப்பாளர் க.குணேஸ்வரனின் சகோதரர், கந்தசாமி குணதீசன் ஏற்றி வைத்தார். 

 இதனைத் தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் தமது வணக்கத்தை செலுத்தியிருந்தனர். 

தொடர்ந்து நினைவுரைகளை தமிழ் தேசிய செயற்பாட்டாளர் நாயகன், பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஆலோசகர் அலன் ஆனந்தன், இளைய தலைமுறை பேச்சாளர் ஓவியா ஆகியோர் நிகழ்த்தினர். 

சிறப்பு நிகழ்வாக திரு.அருள்மொழித்தேவனின் நெறியாள்கையில் உருவான "ஆழிப் பேரலை" என்ற அரங்காற்றுகை நிகழ்வு நடத்தப்பட்டது. இதன் போது, ஆழிப்பேரலையின் போது சாவடைந்தவர்களின் நினைவாக பிரெஞ்சு கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய "Et puis la terre" என்ற உலகப் புகழ்பெற்ற பாடலும் இசைக்கப் பட்டிருந்தது. இறுதியில், ஜெர்மனி நாட்டு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட "மனமாசு" என்ற குறும்படம் திரையிடப் பட்டிருந்தது. 

ஆழிப்பேரலையில் இறந்தவர்களை நினைவு கூர்வதற்காகவும், இயற்கை பேரிடர்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் இந் நிகழ்வு ஆண்டுகள் பல கடந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours