செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்
பிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம்
நேற்றைய தினம் நெதர்லாந்தில் வித்துவான் வேந்தனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் நூல்கள் வெளியீட்டு விழா குகன் குணரெத்தினம் அவர்களின் தலைமையில் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் இடம் பெற்றது
இலண்டனில் இருந்து வருகை தந்த வித்துவான் வேந்தனாரின் மைந்தன் கணக்காளர் திரு. இளஞ்சேய் வேந்தனார், பிரான்சில் இருந்து வருகை தந்த சமூக சேவையாளர் குகன் குணரெத்தினம், தமிழர் கலாச்சார ஒன்றியம் மத்திய நெதர்லாந்து ஒருங்கிணைப்பாளர் திரு சாள்ஸ் குணநாயகம், மற்றும் திரு திருமதி சிறீஸ்காந்தவேள் ஆகியோர் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது.
அதைத் தொடரந்து வித்துவான் வேந்தனாரின் செந்தமிழ்த்தாய் வாழ்த்து திருமதி. பவானி சற்குணசெல்வம் அவர்களால் பாடப்பட்டதுடன் அகவணக்கம் செலத்தப்பட்டு, செல்வி. ஷாகித்யா சிவநேசன் அவர்களால் வரவேற்பு நடனம் தரப்பட்டது.
திரு. ஏட்மன் அவர்கள் வித்துவானி்ன் பாடலை உணர்வுபூர்வமாகப் பாடியதைத் தொடர்ந்து லண்டனிலிருந்து வருகை தந்த வேந்தனாரின் மைந்தன் திரு. இளஞ்சேய் வேந்தனார் அவர்கள் வரவேற்புரை நடாத்தினார். அதைத் தொடர்ந்து தமிழர் கலாச்சார ஒன்றியம் மத்திய நெதர்லாந்து ஒருங்கிணைப்பாளர். திரு சாள்ஸ் குணநாயகம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து பாடகர் நாதனின் இனிமையான குரலில் வித்துவானின் பாடல் ஒன்று பாடப்பட்டது
இதனைத் தொடர்ந்து பிரான்சில் இருந்து வருகை தந்த குகன் குணரெத்தினம் அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து, நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது .
இலண்டனிலிருந்து வருகை தந்த திரு இளஞ்சேய் வேந்தனார் அவர்களால் தமிழன்பர்களுக்கு நூல்கள் கையளிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து திரு. குகன் குணரெத்தினம் தலைமையில் நூலுரைகள் இடம் பெற்றன. கலைஞர் தமிழ் ஆர்வலர் திருமதி. சாந்தா பாலகிருஷ்னன். வேந்தனாரும் குழந்தை மொழியும் என்னும் தலைப்பிலும் , கவிதாயினி. திருமதி. சிவகுமாரி ஜெயசிம்மன் வேந்தனாரின் கட்டுரைகள்.என்னும் தலைப்பிலும் , மொழிபெயர்ப்பாளர். திருமதி பவானி சறகுணசெல்வம் வேந்தனாரின் இராமாயண உரை என்னும் தலைப்பிலும், கவிதாயினி. திருமதி. நிரஞ்சலா றவிரதன். இறையருள்நிறை பூம்பொழில் என்னும் தலைப்பிலும், சைவத் தொண்டர் தமிழ் ஆர்வலர். திரு. K. சிவலிங்கநாதன் வேந்தனார் உரையாற்றிய மையும் குறிப்பிடத்தக்கது. சைவத் தொண்டர் தமிழ் ஆர்வலர். திரு. K. சிவலிங்கநாதன் வேந்தனாரும் சைவ நெறியும் என்னும் தலைப்பிலும்,கவிதாயினி. ஆசிரியை. திருமதி. விமலாதேவி சிவநேசன் வித்துவான் கண்ட பாரதியார் என்னும், தலைப்பிலும் நூலுரை இடம் பெற்றது. இறுதியாக. திரு. இளஞ்சேய் வேந்தனார் அவர்களின் மிகவும் நீண்ட விளக்கமான ஏற்புரை இடம் பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours