த.தவக்குமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா அச்சுறுத்தல்கள் காரணமாக தொழில்வாய்ப்புகளை இழந்து மிகவும் கஸ்ட நிலையில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா அச்சுறுத்தல் காரணமாக குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளை முன்னாள் பிரதியமைச்சரும் முன்னாள் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளரும் சமுகசேவையாளருமான  சோ.கணேசமூர்த்தி அவர்களும் அவரின் புதல்வருமான சோ.கோபிநாத் ஆகியோர் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இதன் ஒரு கட்டமாக போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திக்கோடை  கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வரும்  பெண்கள் தலைமை தாங்கும் 201 குடும்பங்களுக்கான 1500 ரூபாய் பெறுமதியான நிவாரண பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிவாரணம் வழங்குவதற்கான நிதி உதவிகளை. முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளரும் சமுகசேவையாளருமான   சோ.கணேசமூர்த்தி அவர்கள் வழங்கி வைத்தார்.

உதவி வழங்கும் நிகழ்வில் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி,உதவிப்பிரதேச செயலாளர் என்.புவனேந்திரன்,கிராமசேவை உத்தியோகத்தர்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.























Share To:

Post A Comment:

0 comments so far,add yours