(காரைதீவு  நிருபர் சகா ) 

கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தைப் பெற எத்தனையோ சந்தர்ப்பங்கள் கனிந்துவந்தன. எதனையுமே த.தே.கூட்டமைப்பு பயன்படுத்தவில்லை. அத்தனைக்கும் தடையாகஇருந்தவர் கோடீஸ்வரனே.

இவ்வாறு தமிழர்ஜக்கிய சுதந்திரமுன்னணியின் தலைவரும் திகாமடுல்ல கப்பல்சின்ன தலைமை வேட்பாளருமான கருணாஅம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனை ஆதரித்து 11ஆம் கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல்பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் மூத்தஉறுப்பினர் எல்லைக்காவலன் குஞ்சித்தம்பி ஏகாம்பரம்(வயது87) குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில்:

14உறுப்பினர்களுடன் ரணிலுக்கு முட்டுக்கொடுத்த இவர்களால் ஆக 5பேருடனிருந்த றிசாட் முன்னிலையில் ஈடுகொடுக்கமுடியாமல்போய்விட்டது.


அதாவது 14 ஜிஎஸ். பிரிவுகளை மட்டுமே கொண்டிருந்த கோறளைப்பற்றை மேற்கு மத்தி என வெறும் 8பிரிவுகளுடன் அமீரலியால் பிரிக்கமுடிந்தது. ஆனால் 14உறுப்பினர்களுடனிருந்த இந்த த.அ.கட்சியினால் 29ஜிஎஸ் பிரிவுகளைக்கொண்ட கல்முனை தமிழ்பிரதேசசெயலகப்பிரிவை உருவாக்கமுடியாமல் போய்விட்டது?

கேட்டால் கல்முனை தமிழ்ப்பிரிவைபற்றிய விழிப்புணர்வு ஊட்டியது அவர்தானாம். எமக்கு எல்லாம் தெரியும் இதனைபெறவைக்காமல் தடுத்தவரே கோடீஸ்வரன்தான்.ரெலோவிலிருந்து கட்சிமாறிய இவரால் இதுவரை அம்பாறைத்தமிழ் மக்களுக்க என்ன செய்யமுடிந்தது?

இதே தமிழரசுக்கட்சி காலத்தில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலஅபகரிப்பு சூறையாடல் வன்முறைகள். இதனை வெறுமனே கைகட்டி பார்த்துக்கொண்டிருந்தார்கள். இன்றும் அவர்கள் நட்பு பாராட்டுகிறார்கள். உள்ளுராட்சிசபையிலும் இவ்வாறு நட்பு பாராட்டினார்கள்.

கேட்டால் நாங்கள் புட்டும் தேங்காய்ப்பூவும் போலுள்ளவர்கள். இவைகளையிட்டு கண்டும்காணமலிருப்போம் என்பார்கள். இது நீடித்தால்
இன்னும் 2வருடகாலத்தில் தேங்காய்ப்பூ மட்டுமே மிஞ்சும். புட்டைக்காணமுடியாது.

கடந்த உள்ளுராட்சிமன்றதேர்தலில் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பேசும்போது றிசாட்டுக்கு ஏசுமாப்போல் இப்படி ஏசுகிறார்.

அறிவுஞானம் முற்றிய வெள்ளையானைகள் 11கோவேறு கழுதைகளை கிழக்கு மாகாணசபைக்கு அனுப்பியுள்ளன. அவர்களை முஸ்லிம் காங்கிரஸ் பேய்க்காட்டியுள்ளது.

இந்த லட்சணத்துள் வடக்கு கிழக்கு இணைப்பா? 
மலட்டுக்கிழவி பெரியபுள்ளயாகி கல்யாணம்பிடித்து பிள்ளையைப் பெற்றாள் என்றால் நம்பலாம் ஆனால் வடக்கு கிழக்கு இணையும் என்றால் நம்பலாமா? முடியாது. என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours