(எம்.என்.எம்.அப்ராஸ்)

மயோன் குறூப் கம்பனியின்அனுசரனையில்
மருதூர் ஸ்போர்ட்ஸ் லீடர் கழகம் நாடத்தும் "மருதூர் பிரிமியர் லீக்" கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் வெற்றியாளராக மருதூர் சாலேன்சர்ஸ் அணியினர் தனதாக்கிக்கொண்டனர்.

குறித்தப் போட்டியின் இறுதிப் போட்டியானது சாய்ந்தமருதுவொலிவோரியன் பொது விளையாட்டு மைதானத்தில்மருதூர் ஸ்போர்ட்ஸ் லீடர் கழகத்தின் தலைவர்
எம்.எஸ்.எம்.ஹகீம் சரீப் தலைமையில்நடைபெற்றது.இவ் இறுதிப் போட்டியானதுமருதூர் ஸ்டைகர்ஸ் மற்றும் மருதூர் சாலென்ஞர்ஸ் ஆகிய  அணிகள்இடையேஇடம்பெற்றது

மட்டுப்படுத்தப்பட்ட 15 ஓவர் கொண்ட இவ்  போட்டியானதுநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மருதூர் ஸ்டைகர்ஸ் அணியினர் முதலில் களத்தடுப்பை  தெரிவு செய்தனர்.முதலில் துடுப்படுத்தாடியமருதூர் சாலென்ஞர்ஸ்  அணியாணது 15 ஓவர்கள் முடிவில் 7விக்கெட்டுகளை இழந்து  170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடியமருதூர் ஸ்டைகர்ஸ்,
அணியானது 15ஓவர்கள் முடிவில்  7 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இப்போட்டியில் மருதூர்  சாலென்ஞர்ஸ்அணியினர் 35 ஓட்டங்களால் வெற்றிபெற்று மருதூர் பிரீமியர் லீக் சுற்று தொடரை கைப்பற்றிக்கொண்டனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக மருதூர் சாலென்ஞர்ஸ்  அணியின் வீரர் எம்.ஐ. எம்.ரிபான் தெரிவானார்.சுற்று தொடரை தனதாக்கி கொண்ட அணிக்கு தலா 20,000 ரூபா பணிப்பரிசும் கிண்ணமும் வீரர்களுக்கு பதக்கமும்அதிதிகளால்வழங்கிவைக்கப்பட்டது.
இரண்டாவது இடம் பெற்று கொண்ட ஸ்டைகர்ஸ்அணிக்கு 10,000 ரூபா பணப் பரிசும் மற்றும் கிண்ணங்களும்,பதக்கமும்அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.

சாய்ந்தமருது பகுதியில் உள்ள முன்னனி 12 கழகங்களை ஒன்றினைத்து அதில்மருதூர் லயன்ஸ், மருதூர் பைடர்,மருதூர் சாலேன்ஞ்சர்ஸ், மருதூர் நைட் ரைடரஸ், மருதூர் வொரியஸ், மருதூர் ஸ்டைகர்ஸ்,
என ஆறு கழகங்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டியாக இப்போட்டிகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மாயோன் முஸ்தபா அவர்கள் கலந்து சிறப்பித்தார் கௌரவ அதிதியாக  மாகாண அணி கிரிக்கெட் வீரர் ஆகில் இன்ஹாம் மற்றும் மேலும் பலர் அதிதிகளாக இதன்போது கலந்து கொண்டனர்.மேலும் இதன் போது அதிதிகள் கலந்து கொண்டவர்கள் பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டனர்



.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours