செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்
(த.தவக்குமார்)
வாகரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பலியான சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது கடந்த 17ம் திகதியன்று அவர்களின் தொழிலான கடற்தொழில் வேலைக்காக கடற்கரையை நோக்கி துவிச்சக்கரவண்டியில் குறித்த பிரதான வழியினூடாக சென்றுகொண்டிருந்த போது குறித்த வீதியினூடாக பின்நோக்கி கார் இவர்களை அடித்து சென்றுள்ளது.சம்பவ இடத்தில் படுகாயமடைந்த இருவரையும் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும வழியில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்ரைய நபரான இரு பிள்ளைகளின் தந்தையான சபாவதி ரவியேந்திரன்(26) மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (18) மாலை உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக காத்தாங்குடி (வடக்கு) பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டார்.
விபத்தினை ஏற்படுத்திய கார் சாரதி பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டதுடன் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours