செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்
த.தவக்குமார்
மண்டூரில் சோகச்சம்பவம்
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மட பிரதான வீதியில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கிய மண்டூரைச் சேர்ந்த இளைஞன் ஏகாம்பரம் சிசிக்குமார் (25) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று 26 உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது குறித்த இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மண்டூரில் இருந்து தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் களுவாஞ்சிகுடி பிரதான வீதி ஊடாக சென்று கொண்டிருக்கும் போது குருக்கள்மடம் பிரதான வீதியில் கட்டுபாட்டை இழந்து நேருக்கு நேர் பயணித்த காருடன் மோதியதில் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.
விபத்தினை ஏற்படுத்திய சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours