(த.தவக்குமார்)

இலங்கையில் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையில் வராலற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசாமி ஆலயத்தின் வருடார்ந்த உற்சவம் அதாவது கடந்த கடந்த 13 ஆம் திகதி; நிபந்தனைகளின் அடிப்படையில் ஆரம்பமானது.

தற்போது நாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று காரணமாக ஆலய திருவிழாக்கள் நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டிருந்தது அயினும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களின் வழிகாட்டுதலுக்கு அமைவாக நிபந்தனைகள் அடிப்படையில் உற்சவம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஊடகசந்திப்பு  இன்று நடைபெற்றது.இச்சந்திப்பில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.புவனேந்திரன்,சுகாதாரப்பரிசோதகர்களான ப.ஜதுநந்தன்,கு.குபேரன் கலாச்சார உத்தியோகத்தர்.ஆ.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அடியார்கள் தங்களை கொரோணா தொற்றில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு நாங்கள் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய நிபந்தனைகளே இது.

ஆலயத்திற்கு வரும் போது துகக் கவசம் அணிதல்,ஆலயத்திற்குள் உள்வரும் போதும் வெளியேறும் போதும் வெப்பநிலையை  பரிசோதித்தல் மற்றும் சமுக இடைவெளியை பேணி வழிப்hட்டில் ஈடுபடுதல் வேண்டும்,சமுக இடைவெளியை பேணி வழிபாட்டில் ஈடுபடுதல் வேண்டும்,ஓரே சந்தர்ப்பத்தில் ஆலயத்தின் உள் வீதியில் 50 இற்கு குறைந்த பக்தர்களும் வெளி வீதியில் 150 இற்கு குறைந்த பக்தர்களும் சுவாமி தரிசனத்தில் ஈடுபடல்வேண்டும்,ஆலய தரிசனம் நிறைவுற்றதும் ஆலயத்தில் தரித்து நிற்பதை தவிர்த்தல் வேண்டும்,ஆலய சுற்றுப்புற சூழலில் அன்னதானம் மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை ஏனையயோருக்கு வழங்குவதை தவிர்த்தல் வேண்டும்,காவடி எடுத்தல்,அலகு குற்றுதல்,அங்கப்பிரதட்சணம் செய்தல் போன்ற நேர்கடன்களை தவிர்த்தல் வேண்டும்.ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் ஏனையயோருக்கும் வழிபாட்டிற்கு இடம் கொடுக்கு வகையில் குறித்த நேரத்திற்குப் பின்னர் ஆலயத்தில் தரித்தலை தவிர்த்தல் வேண்டும்.ஆலய வளாகம் சுற்றுப்புறங்களில் உணவகங்கள் கடைகள் வைத்திருத்தல் முற்றாக தடைசெய்ப்பட்டுள்ளது.இவ்விடயங்களை நாங்கள் அனைவரும் கடைப்பிடிக்கும் பட்சத்தில் எங்களை நாங்களே கொரோணா தோற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்



Share To:

Post A Comment:

0 comments so far,add yours