இலங்கை திரு அவையில் அன்பியம் ஆரம்பிக்கப்பட்டு 25 வது ஆண்டு வெள்ளிவிழாவினையும் , இலங்கையின் திருத்தூதர் தூய யோசப்வாஸ் அடிகளாரின் திருவிழாவினையும் சிறப்பிக்கும் வகையில் இலங்கை திரு அவையுடன் மட்டக்களப்பு மறை மாவட்டம் திரு அவையாக ஒன்றிணைந்து " அன்பியம் ஊடாக கிறிஸ்தவ வாழ்வின் புதுப்பித்தல் " என்னும் கருப்பொருளில் 2021 ஆம் ஆண்டை பிரகடனப்படுத்தி ஆண்டுக்கான வாசக பதாகையினை ஆயரினால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது
மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் வருடாந்தம் நடைபெறும் மறை மாவட்ட மகாநாடு மற்றும் மாவட்ட மேய்ப்புப்பணிச்சபையின் பொதுக்கூட்டத்தின் போது பிரகடனப்படுத்தும் நிகழ்வானது தற்போது மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 2021 வருடத்திற்கான மேய்ப்புப்பணிச்சபை பொதுக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டு மறை மாவட்ட ஆயரும் மேய்ப்புப்பணிச்சபை தலைவருமான கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டைகையின் பணிப்புரைக்கு அமைய 2021 ஆம் ஆண்டு " அன்பியம் ஊடாக கிறிஸ்தவ வாழ்வின் புதுப்பித்தல் " என்னும் ஆண்டாக பிரகடனப்படுத்துவது தொடர்பாக மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க ஆலய பங்கு அருட்தந்தையர்களுக்கும் அறிவிக்கப்பட்டு பங்கு மக்களுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது .
அதற்கு அமைய 2020 நற்கருணை ஆண்டு நிறைவடைந்து 2021 " அன்பியம் ஊடாக கிறிஸ்தவ வாழ்வின் புதுப்பித்தல் " ஆண்டை பிரகடனப்படுத்ததும் நிகழ்வும் , விசேட திருப்பலியும் மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டைகை தலைமையில் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இன்று நடைபெற்றது
2021 " அன்பியம் ஊடாக கிறிஸ்தவ வாழ்வின் புதுப்பித்தல் " ஆண்டாக பிரகடனப்படுத்தும் விசேட திருப்பலி நிகழ்வில் புளியந்தீவு மரியாள் பேராலய பங்கு மேய்ப்புப்பனிச் சபைகளின் உறுப்பினர்கள் ,ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் , அப்போஸ்தலிக்க சபை உறுப்பினர்கள் பங்கு பக்தி சபையினர் மற்றும் அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் பொது நிலையினர் கலந்துகொண்டனர்
Post A Comment:
0 comments so far,add yours