(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையிலே காணிகளை பகிர்ந்து அளிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு அவர்களின் தொழில் முயற்சிக்கான திட்ட முன்மொழிவுகளும் கோரப்பட்டு இருந்தது.
இதன் இடிப்படையில் காணி பாவணை திட்டமிடல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் கி~hந்தி கலந்து கொண்டு காணி பெறுவோருக்கான நேர்முக தேர்வுக்கான திகதியினை விரைவாக பிரதேச செயலாளர்கள் முன் வைக்கின்ற பட்சத்தில் காணி கோரி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முக பரீட்சைகள் விரைவாக எதிர்காலத்தில் நடாத்தப்படும் என குறிப்பிட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் 79590 நபர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் 70769 விண்ணப்பதாரிகள் மாத்திரமே காணி பெறுவதற்கு தகுதி உடையவர்களாக உள்ளனர்.
அந்த வகையிலே கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 8438 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 12860 பேரும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகப்பிரிவில் 4652 பேரும், மண்முனை பற்று பிரதேச செயலகப்பிரிவில் 2714 பேரும், கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 4239 பேரும், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப்பிரிவில் 4007 பேரும், கோரளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 3044 பேரும், கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் 3516 பேரும், மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 2168 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் 2349 பேரும், போரதீவுபற்று பிரதேச செயலகப்பிரிவில் 4631பேரும், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் 6585 பேரும,; மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 3090 பேர்களுடைய விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
Post A Comment:
0 comments so far,add yours