(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு 
 
மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தினர் இன்று(20) மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சந்தித்தனர்.

இந் நிறுவனத்தினர்  பிறந்திருக்கின்ற 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றற்ற நாடாக மிளிர்வதற்கு நாட்டின் சகல துறையினர்களும் அயராத முயற்சி மூலமே கொரோனா அற்ற நாட்டினை உருவாக்க முடியும் என்பதனை வலியுறுத்தும் வகையிலான துண்டுப்பிரசுரங்களை மாவட்ட அரச அதிபரிடம் கையளித்தனர்.

செவிப்புலன் வலுவற்றோருக்கான தமிழ் சைகை மொழி மூலமாக கொரோனா விளிப்புணர்வு செயற்பாட்டினை முன்னெடுக்க முடியாமல் கடந்த காலங்களில் பல அசௌகரியங்களை சந்திசந்தித்து வந்ததாக மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத் தலைவர் பீ. கஜதீபன் அரச அதிபரிடம் தெரிவித்தார்.

தமிழ் சைகை மொழி மூலமான ஸ்டிக்கர்கள் பதாதைகள் போன்றவற்றை மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல இடங்களிலும் காட்சிப்படுத்தி செவிப்புலன் வலுவற்றோர்கள் இலகுவாக விளாங்கிக்கொள்ளும் வகையில் இவ் ஸ்டிக்கர்கள் பதாதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் தமிழ் மொழி மூலமான தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் குறிப்பாக செய்தி வாசிப்பின் போது சைகை மொழி இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதால் இது விடயமாக தங்களின் கவனத்திற்கு எடுத்து  முக்கியமாக நாட்டு நடப்புக்களை அறிந்து கொள்ள முடியாமல் இருப்பது எங்களுக்கு பெரும்; அசௌகரியங்களை எற்படுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக  தகவல் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தி உரிய செய்தி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு இவ்விடயத்திற்கு தீர்வினை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் திரு. ஏ. நவேஸ்வரன் மாவட்ட செயலக கணக்காளர் திரு. எம். வினோத் மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே. தயாபரன் மாவட்ட தகவல் அதிகாரி திரு. வீ. ஜீவானந்தன் மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் செயலாளர் திரு. ரீ. தேவதர்சன் மற்றும் நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours