(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர் கொரொனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில் அவர் சிசிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிசிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டபோது அவரை அனுமதிப்பதற்கு காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாக தாதியர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரொனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே ஒரு இடத்தினை ஒதுக்கி சிசிச்சை வழங்குமாறு வலியுறுத்தியும் கொரொனா சிசிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கு விஷேட சலுகைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அரச தாதியர் சங்கம், பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன.பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் நா.சசிகரன் உட்பட மாவட்ட தலைவர்கள்,தாதியர்கள் என பெருமளவானோர் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் 30க்கும் மேற்பட்ட சேவையாளர்கள் தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று முன்தினம்(17)திகதி தாதிய உத்தியோகத்தர் ஒருவர் காத்தான்குடி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டபோது மட்டக்களப்பு தாதியர்களுக்கு இங்கு இடமில்லை,காத்தான்குடி தாதியர்கள்தான் இங்கு இடமொதுக்கப்பட்டுள்ளது என காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜாபீரினால் தெரிவிக்கப்பட்டது.
கொரனா பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கான விசேட சலுகைகள் கோரப்பட்டுள்ளபோதிலும் என்ன சலுகையென குறிப்பிடவில்லையெனவும் அவ்வாறு தேவையான சலுகைகளை குறிப்பிடும்போது உரிய திணைக்களத்திற்கு அவை அனுப்பிவைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours