(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
 
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள காணி பதிவகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள  அலுவலக பிரிவு அனைத்திற்கும் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக சுகாதாரப் பிரிவனரால் தொற்று நீக்கல் திரவகம் விசிறும் பணி இன்று (20) இடம்பெற்றது.

காணி பதிவகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இவ் அலுவலகம் மறுஅறிவித்தல் வரை முற்றாக முடக்கப்படும் எனவும் சுகாதாரப் பிரிவனர் கருத்து தெரிவித்தனர். எதிர்வரும் நாட்களில் அவ் அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் பீதி அடைந்த நிலையிலேயே தங்கள் கடமையை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours