மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் ஒன்பதாவது கொரோனா தொற்ராளர் இன்று (19) இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தொழிலின் நிமிர்ந்தம் வெளிநாடு செல்லும் நோக்கில் கொழும்புக்குச் சென்று தனியார் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கும் நிலையம் ஒன்றில் இரத்தப்பரிசோதனை செய்யும் போது அவருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனையும் செய்யப்பட்டதாகவும் பின்னர் அவர் அன்றைய தினம் தனது வீடு திரும்பிய நிலையில் அவருடைய பீ.சீ.ஆர் பிரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாருக்கு விடயம் பற்றி தெரியப்படுத்தப்பட்;டதையடுத்து குறித்த நபர் பழகிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விடயம் சம்மந்;தமாக பிரதேச கிராமசேவகர்,பொலிஸர்,சுகாதார பரிசோதகர்கள் குறித்த பிரதேசத்தினை கண்காணித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
Post A Comment:
0 comments so far,add yours