கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக கல்வி நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்த காரைதீவு பிரதேச பாலர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் முகமாக  கிருமி தொற்று நீக்கிகள் மற்றும் கை கழுவும் வேசன் என்பன காரைதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட  10 முன் பள்ளிகளுக்கு சிறுவர் செயலகத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலாளர் சி. ஜெகராஜனின் தலைமையில்  (20) வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எ.ஜெஸ்மீரும் கலந்து கொண்டார். 


நூருல் ஹுதா உமர் 



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours