,

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு   

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஓசியன்  ஈஸ்டர் லங்கா நிறுவனம்  முன்பள்ளி சிறார்களின்  கற்றல் நடவடிக்கையினை  மேம்படுத்தும்  வகையில்  மாவட்டத்தில் வறுமை கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களின்  சிறார்களின் கற்றல் செயல்பாடுகளுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன,

 அந்தவகையில்  மட்டக்களப்பு மாவட்டத்தின் 14  பிரதேச செயலக பிரிவுகளில்  இயங்கி வருகின்ற முன்பள்ளி பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட 20 முன்பள்ளி பாடசாலை   சிறார்களுக்கு  ,முன்பள்ளி ஆசிரியர் களுக்குமான   சீருடைகள் மற்றும்  புத்தக பைகள் , கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டன .

ஓசியன்  ஈஸ்டர் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் டிலானி பண்டர்   வழிகாட்டலில் கீழ்  ஓசியன்  ஸ்டர் லங்கா  . யு . கே  .நிறுவனத்தின்  நிதி அனுசரணையில்   நிறுவனத்தின்  திட்ட முகாமையாளர் சாலினி பத்மராஜா தலைமையில்  முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் , முன்பள்ளி மாணவர்களுக்கா சீருடைகள்  மற்றும்  புத்தக பைகள்,  கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன .

மட்டக்களப்பு மன்ரேசா  இலங்கை செஞ்சிலுவை  சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள் ,ஓசியன்  ஈஸ்டர் லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் கலந்துகொண்டனர்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours