படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 24 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலையில் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக கிழக்கு ஊடக ஒன்றியத்தின் தலைவர் தேவஅதிரன் தெரிவித்தார்.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ்.ஊடக அமையம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களுடன் இணைந்து கிழக்கு ஊடக ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
சுகாதார விதி முறைகளிற்கு ஏற்றாற்போல் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளென பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி ஈகைச்சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலியும் இடம்பெறவுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours