(த.தவக்குமார்)
தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது வெள்ளநீர் பாதைகளை துவசம் செய்து போக்குவரத்துக்கு பெரும் தடையை ஏற்படுத்தி உள்ளது
தற்போது நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக தொடர்ந்து பெய்யும் அடைமழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு காட்டு வெள்ளமும் போக்குவரத்து பாதைகளை ஊடறுத்துச் செல்வதால் பாடசாலைக்குச் சென்று கடமையாற்றும் அதிபர்,ஆசிரியர்கள் தங்களது வழிப்பயணங்களில் உயிராபத்துக்களை எதிர்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர் இவ்வாறான வெள்ள அனர்த்த காலங்களில் தொடர்ந்தும் இந்த அவலங்களை பலவருடங்களாக கால்நடையாக பல நீர்ஊடறுப்புக்களை கடந்து ஈரஉடையுடனே பணியாற்றுகின்றார்கள்.
இவ்வாறான காலங்களில்
போரதீவுப் பற்று பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட ஆனைகட்டியவெளி,சின்னவத்தை கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தனித்தீவாக மாறிவிடுகின்றது
இக்கிராமங்களை பாதுகாப்பான பிரதான வீதிகளுடன் இணைக்கும் பாதை வெல்லாவெளி காக்காச்சிவட்டை ஊடாக ஆனைகட்டியவெளி கிராமத்துக்கு இடையில் காணப்படும் நவகிரிக்குளத்தின் கிளைஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலமாகும் இது பலவருடமாக தாழ்வான நிலையில் புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது இதனால் வெள்ளகாலங்களில் வெள்ளநீர் பாலத்தின் மேலாக பாய்வதனால் இக்கிராமங்களை சென்றடைய பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள்,அதிபர்,ஆசிரியர்கள்,கல்வி அதிகாரிகள் அதிகமானோர் களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் இருந்து கடமைக்கு செல்பவர்களாகும் இது 20 கிலோ மீற்றர் தூரமாகும் இவாறான வெள்ளகாலங்களில்மாற்று வழியாக மண்டூர் ஊடாக மூங்கிலாற்றுப்பாலத்தின் வழியாக 25 கிலோ மீற்றா தூரத்தை கடந்து ஆனைகட்டியவெளி கிராமத்தை அடையவேண்டியுள்ளது இதுவும் காட்டுவெள்ளம்,இக்னியாகல வான்கதவுகள் திறக்கப்படுவதால் வீதிஉடைப்பெடுத்து போக்குவரத்திற்கு தடையேற்படுகின்றது.இதற்கு மாற்றீடாக மண்டூர் ஊடாக மாலயர்கட்டு வழிப்பாதைவழியே 30 கிலோ மீற்றா தூரத்தை கடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது இங்கும் வெள்ளநீர் பாதைகளை ஊடறுத்து தடையேற்படும்போது மாற்றீடாக வெல்லாவெளி பிரதானவீதியினூடாக மண்டூர் 35 கிராமம் ஊடாக சின்னவத்தை சென்று ஆனைகட்டியவெளிக்கு 35 கிலோ மீற்றா தூரத்தை கடக்கவேண்டியுள்ளது இதுவும் வெள்ளகாலங்களில் நீர் ஊடறுத்துச் செல்லும்போது வைக்கியெல்லை ஊடாக கொணாகொல சிங்ளப்பிரதேசத்தினூடாக சின்னவத்தையினை அடைந்து 50 கிலோ மீற்றா தூரத்தைக்கடந்து ஆனைகட்டியவெளியினை அடையவேண்டியுள்ளது இந்தப்பாதையும் இவ்வாறான காலங்களில் தாள்நிலப்பிரதேச - வீதியின் குறுக்கே வெள்ளநீர் பாய்வதனால் இதுவும் போக்குவரத்திற்கு சாத்தியமற்றதாகும் வெள்ளகாலங்களில் அதிகாலையில் ஆசிரியர்கள் எழுந்து முதலில் எந்தப்பாதையினைத் தெரிவு செய்வது என்று தெரியாமல் அலைந்து திரிந்து நேரத்தினைக் கடத்திவிட்டு பாடசாலைக்குச் செல்லமுடியாமல் தங்களுடைய சொந்த விடுமுறையினை அறிவித்து உடல் சோர்வுடனும் மனஅழுத்தங்களுடனும் வீடுதிரும்பிதுமே அதிகமாகும்
எனவே இக்காலத்தில் நவகிரிப்பாலத்தில் பாதுகாப்பான நீர் போக்குவரத்து மார்க்கங்களை பிரதேச சபையோ அல்லது பிரதேசசெயலகமோ தற்காலிக தீர்வாக ஏற்படுத்தல் மேலும்
இதற்கான நிரந்தர தீர்வாக காக்காச்சிவட்டைக்கும் ஆனைகட்டியவெளிக்கும் இடையேயுள்ள நவகிரிப்பாலத்தியினை புனரப்பதோ அல்லது புதியபாலத்தினை போடுவதே ஆகும் அல்லது மண்டூருக்கும் ஆனைகட்டியவெளிக்கும் இடையேயான மூங்கிலாற்றுப்பாலத்தின் வடக்கேயான சமுளையடிவட்டை வீதியினை முறையாக செப்பனிட்டு கொங்குறீட் இடுவதாகும்.இவ்வீதியானது கமநலத்திணைக்களத்தின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எது எவ்வாறாயினும் இதுபற்றி எத்தனை பதிவுகள் இட்டாலும் கவனிக்க வேண்டியவர்கள் கண்டுகொள்ளாவிட்டால் துயரங்கள் சுமப்பவர்கள் தொடர்ந்தும் சுமப்பரே
அதிகஸ்டப் பிரதேசங்களில் இடமாற்றம் வழங்கினால் அதிகாரிகளையும்,அரசியல்வாதிகளையும் நாடி உயர்செல்வாக்குப்பெற்று சொகுசான பாடசாலைகளில் தங்களுடைய சேவைக்காலங்களை கடத்தி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மத்தியில் அடிப்படை வசதிகளற்ற பிரதேச மாணவர்களின் கல்வித்தேவையினை நிறைவேற்றி அச்சமுகத்தின் நிலையான அபிவிருத்திக்காக கடமையாற்றும் ஆசிரியர்களும் ஏனையவர் போல் வாழத்தலைப்பட்டால் இச்சமுகத்தின் நிலை கேள்விக்குறியே
எனவே தயவுசெய்து அதிகாரிகள்இஅரசியல்வாதிகள் உண்மையான சமுக அக்கறையுடன் ஒருசமுகத்தின் நிலையான அபிவிருத்தி என்பது அச்சமுகம் பெறும் நிலைபேறான கல்வியினால் என்பதை எண்ணித்துணிந்து கருமாற்ற அனைவரும் முன்வரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
Post A Comment:
0 comments so far,add yours