(-க.விஜயரெத்தினம்)
பெரியகல்லாற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணத்துக்கான விசாரணையை துரிதமாக ஆரம்பித்து தமக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பிரதிப் பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டார்.கிழக்கு மாகாண ஆளுநர் பிரதிப் பொலிஸ்மா அதிபரை அழைத்து பெரியகல்லாற்றில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பாக தகவல்களை கேட்டறிந்து கொண்டதுடன் பிரதி பொலிஸ்மாதிபர் கவனத்துக்கு இந்த விடயத்தை தெரியப்படுத்தியதுடன் அவர் உடனடியாக தனியாக ஒரு பொலிஸ் குழுவை அமைத்து செவ்வாய்கிழமை(19)முதல் சிறுமியின் மரணத்துக்கான விசாரணையை ஆரம்பித்து தனக்கு அறிக்கையிடுமாடு பிரதிப் பொலிஸ்மா அதிபரை கிழக்கு மாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரிய கல்லாற்றில் உயிரிழந்துள்ள 11வயதுடைய சுதாகரன்-அஸ்வினி எனும் சிறுமியின் மரணமானது இனம்,மதம்,மொழி கடந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய ஒரு துயரச்சம்பவமாகும்.
இதனைத்தொடர்ந்து உயிரிழந்த சிறுமியின் மரணத்தின் பின்னணியை விரிவாக கேட்டறிந்த கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள், உடனடியாக கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரை அழைத்து அவரின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு வந்ததுடன், உடனடியாக தனியாக ஒரு பொலிஸ் குழுவை அமைத்து செவ்வாய்கிழமை(19)முதல் சிறுமியின் மரணத்துக்கான விசாரணையை ஆரம்பிக்குமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபரை கிழக்கு மாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டதுடன் இதற்கு அமைவாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டு குற்றவாளி விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டணை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினுடைய எதிர்பார்ப்புமாகுமென அவர் மேலும் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours