( வி.ரி.சகாதேவராஜா)
2020இன் மூன்றாம்தவணைவிடுமுறையின் பின்னர் 2021முதலாந்தவணைக்காக நாட்டிலுள்ள அறநெறிப் பாடசாலைகள் நேற்றுமுன்தினம் (17)ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தவைக்கப்பட்டது.
காரைதீவு சித்தர் அறநெறிப்பாடசாலையில் கூடுதலான மாணவர்கள் ஆசிரியர்கள் ஆவலோடு அறநெறிப்பாடசாலைக்கு சமுமளித்திருந்தனர்.
பாடசாலைகள் ஆரம்பித்துவைத்தமை தொடர்பில் பெற்றோர்களும் புத்திஜீவிகளும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.
சுகாதார வழிகாட்டலுக்கமைவாக அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கைகழுவி முகக்கவசத்துடன் சுகாதாரமுறைப்படி சமுகமளித்திருந்தனர்.
காரைதீவு சித்தர் அறநெறிப்பாடசாiலில் கொரோனா தொடர்பாக சுகாதார நடைமுறைகள் வழிகாட்டல்கள் தொடர்பாக மாணவர்களுக்கு பூரண விளக்கமளித்ததுடன் உடல் அப்பியாசங்களும் நடைபெற்றன.
Post A Comment:
0 comments so far,add yours