போரதீவுப்பற்று பிரதேசசபை பிரிவிற்குட்பட்ட மண்டூர்-ஆனைகட்டியவெளி வீதியானது அண்மையில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வெகுவாக சேதமடைந்து குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.இதன் காரணமாக நாளாந்தம் இவ் வீதியால் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பொதுமக்கள்,பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். பொதுவாக ஆனைகட்டியவெளி,காக்காச்சிவட்டை,
சின்னவத்தை முதலிய பாடசாலைகளுக்கு கடமைக்கு செல்லும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் தமது போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..  அசாதாரண சூழ்நிலை கள் ஏற்படும் பொழுது பொதுமக்களின் முக்கிய நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை உடன் பெற்றுக்கொடுப்பது உரிய அதிகாரிகளின் கடமையல்லவா! 


எனவே மிக விரைவில் இவ்வீதியை சீர்செய்து தருமாறு பிரதேச மக்கள்  உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours