மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, உரிய மேலதிக வகுப்புகள் நடத்தப்படும்‌ இடத்தில்‌ இட அளவிற்கு அமைவாக சமூக இடைவெளியை பேணி மாணவர்கள் கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டு்ம என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒரு மேலதிக வகுப்பில் கலந்துகொள்ளக்‌ கூடிய ஆகக்‌ கூடிய மாணவர்களின்‌ எண்ணிக்கை 100 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும், 100 மாணவர்களுக்குக் குறைவான இட வசதியைக் கொண்ட இடங்களில் வழமையாக வகுப்பில்‌ கலந்து கொள்ளும்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கையில்‌ 50 வீதமான மாணவர்களுக்கு மாத்திரம்‌ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours