கடந்த பாராளமன்ற தேர்தலில்  கருணாவிற்கு ஆதரவாக பொத்துவில் பிரதேசத்தில் செயற்பட்ட சுரேஷ்குமார் , பொலிஸ் உத்தியோகத்தரான ருக்சன் , ராஜேந்திரன் என்பவர்களே  என் மீது காட்டுமிராண்டித்தனமாக வாள்  வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்  என பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.  


சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் 
ஊறணியில்  உள்ள எனது விடுதியில் தங்கியிருந்த நேரம் தொலைபேசி அழைப்பொன்றில் கதைத்து கொண்டிருந்தேன் அந்த நேரம் மதில் மேலால் பாய்ந்து வந்தவர்கள் என் பின்னால் வந்து தலையில்  வாளினால் தாக்குதலை மேற்கொண்டனர்.  என்னால் முடிந்த அளவிற்கு தாக்கும் போது தடுத்திருந்தேன் பலத்த  அதன் பின்னர் நான் அப்பாவை சத்தமிட்டு அழைத்திருந்தேன் அவர் சம்பவ இடத்திற்கு ஓடி  வந்ததும் தாக்கியவர்கள் ஓடி சென்றனர் .  தாக்கியவர்களை அடையாளம் கண்டேன் . பின்னர் பொத்துவில் வைத்தியசாலைக்கு 
அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு வந்துள்ளேன் . 


என்னை தாக்கியவர்கள்  கடந்த பாராளமன்ற தேர்தலில் கருணாவிற்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் அந்த நேரம் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் மீதும் தாக்குதலை மேற்கொண்டார்கள் . இவர்களுக்கு எதிராக பல வழக்குகள் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.  தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர் வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமை புரிபவர்  . 

இவர்களை போன்று கருணாவிற்கு பின்னால் போகும்  இளைஞர்கள் அடி தடி என வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இவ்வாறானவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் .   எந்த எதிர்ப்புகள் வந்தாலும் நான் பிரதி தவிசாளர் பதவியை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து மக்களுக்கு எனது சேவைகளை செய்யவுள்ளேன். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours