ஐ.எல்.எம். நாஸிம் ,நூருல் ஹூதா உமர்
சம்மாந்துறை கல்வி வலயத்திட்குட்பட்ட நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்தவெள்ளிக்கிழமை (15)மாலை பாடசாலை அதிபர் ஏ.பி. ஹிபத்துல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பின்தங்கிய பிரதேசமான நெய்னாகாடு பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த முன்னெடுத்திருக்கும் இவ்வேலைத்திட்டத்தின் பிரதம அதிதியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டப்பகுப்பாளர் வை.பி.எம். அஸ்மி கலந்து கொண்டார். மேலும் சம்மாந்துறை வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.அப்துல் மஜீத், கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.ஸபூர் தம்பி, பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் இஸட்.எம். றிஸ்வி உட்பட பாடசாலை பிரதி, உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours