மட்டக்களப்பு நகரப்பகுதியான கோட்டமூனை கிராமசேவகர் பகுதியானது சனிக்கிழமை (9) மாலை கொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.


தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சுமார் 319 குடும்பங்களை சார்ந்த 960 நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் இவர்களில் அரசாங்க உத்தியோகத்தர்கள் 118 குடும்பங்களை சார்ந்தவர்களும் ஏனையோர் 201 குடும்பங்களை சார்ந்தேர் அன்றாடத்தொழில்களில் ஈடுபட்டு வருபவர்களாகும்.

குறித்த 201 குடும்பங்களை சார்ந்;தவர்களுக்கான நிவாரண நடவடிக்கையினை மேற்கொள்வதற்கான பூர்வாங்கநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்;
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours