இ.சுதா
பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலையில் பயிற்சிக்காக பாடசாலையில் இணைத்தல் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் இணைக்கும் நிகழ்வு
பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள பயிலுனர்களை பயிற்சிக்காக அரச துறையில் இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமையில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது பயிலுனர்களாக பாடசாலையில் இணைத்துக் கொள்ளல் நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 237பட்டதாரி பயிலுனர்களில் பாட ரீதியாக போரதீவுக் கோட்டத்திற்கு 120பேரும் மண்முனை தென் எருவில் பற்றுக் கோட்டத்திற்கு 117பேரும் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours