( வி.ரி.சகாதேவராஜா)


பொத்துவில் பிரதேசசபைக்கு பதில்தவிசாளராக நியமிக்கப்பட்ட உபதவிசாளர் பெருமாள பார்த்தீபனுக்கு வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை பொத்துவில் ஊறணியில் உள்ள அவரது விடுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் அவரது விடுதியில் மாலை 7 மணியளவில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது பின்னால் வந்தவர்கள் வாள் மற்றும் பொல்லால் தலையில் தாக்கியதில் சத்தமிட்டுள்ளார் விடுதியில் நின்ற அவரின் தந்தை உடனே அவரை வைத்தியசாலைக்கு எடுத்து சென்று  தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மதில் மேலாக ஏறி வந்த ஒரு இனந்தெரியாத குழுவினரே இந்த தாக்குதலை நடத்தி சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன .இது தொடர்பில் பொத்துவில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இரு பதில் தவிசாளர்கள் நியமனம்

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கு பதில் தவிசாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவித்தலை வர்த்தமானி சட்டத்தின் மூலம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் விடுத்துள்ளார்.

பொத்துவில் இறக்காமம் ஆகிய  பிரதேச சபைகளின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) நிறைவேற்ற முடியாமல் போனதையிட்டு ஏற்பட்ட சிக்கலான நிலமையைத் தீர்ப்பதற்கு விசாரணையொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளதாகவும் குறித்த விசாரணை முடியும் வரை மேற்படி சபைகளின் தவிசாளர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 

இதன்படி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள தவிசாளர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உடனடியாக செற்படும் வண்ணம் பொத்துவில் பிரதேச சபைக்கு உப தலைவரான பெருமாள் பார்த்தீபன் இறக்காமம் பிரதேச சபைக்கு உப தலைவரான ஏ.எல். நௌபர் ஆகியோரின் பெயர்கள் வர்த்தமானி பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours