நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், தகுதிபெற்ற மாணவர்கள் செப்டெம்பர் மாதமளவில் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இம்முறை க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக, மேல் மாகாண பாடசாலைகளை இம்மாதம் 25 ஆம் திகதி திறக்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours