மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி பதிவகத்தின் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக காணிப்பதிவகத்தின் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
காணிப்பதிவகத்தில் பணிபுரியும் ஊழியர் இன்று கடமைக்காக வருகின்ற வேளை வீதி விபத்தில் சிக்கியநிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு மேற்கொண்ட அன்டிஐன் பரீசோதணையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட காணிபதிவகத்தில் பணியாற்றுகின்ற அனைத்து உத்தியோகத்தர்களும் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தங்களின் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் நோய் தெற்று அறிகுறிகள் ஏற்படுகின்ற போது சுகாதாரதுறையினரை தொடர்பு கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
காணிபதிவகத்தின் சேவைகளை பெறுவதற்கு வருகின்ற பொதுமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை இச்சேவைகளை பெறமுடியாது என்பதை மாவட்ட அரசாங்க அதிபர் தொரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours