மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2021ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவானது நேற்று சனிக்கிழமை (16.01 )இடம்பெற்றது.

பிரதே இளைஞர் சேவைகள் அதிகாரியும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளருமாகிய கணேசமூர்த்தி சசீந்திரன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஒழுங்குபடுத்தலில் மண்முணை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவரும், இலங்கை இளைஞர் கழகசம்மேளனத்தின் ஊடகப்பிரிவு தலைவரும்,  நிறைவேற்று குழு உறுப்பினருமான ரி.விமலராஷ் தலைமையில்   வவுணதீவு பிரதேச செயலகத்தில் இக் கூட்டம் இடம்பெற்றது. 

 பிரதேசதத்தில் பதிவுசெய்யப்பட்ட  இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள்,  சம்மேளனத்தின் பழைய நிருவாக அங்கத்துவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். 

இதன் போது 2021ம் வருடத்திற்க்கென  புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது தலைவராக கன்னங்குடா கண்ணகி இளைஞர் கழகத்தின் பொருளாளர் முரளிதரன் கிதுர்ஷன், செயலாளராக கரையாக்கந்தீவு துர்க்கா இளைஞர்கழக செயலாளர்  ச.யோகிதா,  பொருளாளராக அ.விதுஸ்வரன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

சம்மேளனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் கடந்த கால செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளித்த இளைஞர் சேவைகள் அதிகாரி சசீந்திரன் அவர்கள் பிரதேச மட்டத்தில் வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றியீட்டியவருக்கான ரூபா பத்தாயிரம் பெறுமதியான காசோலையையும் வழங்கி வைத்தார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours